காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Jul 13, 2018

காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்,  திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று  நடந்தது.
இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி  ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து  வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.


அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500  கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 842 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர்.  எனவே, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன்  நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரங்கள் வாங்கப்படுகிறது. அதன்மூலம் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்ய முடியும். அதன் விபரங்கள்  உடனுக்குடன் எங்களுக்கு வந்துசேரும். நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட் சிறப்பான  உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வார்.


சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் வழங்கப்படும். காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம்  நடைபெறும். 2012-13, 2013-14ம் ஆண்டுகளில் டெட் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 82 ஆயிரம் பேர்  காத்திருக்கின்றனர். அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை வாய்ப்பு இருக்கிறது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற  மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு முன்னுரிமை கிடையாது இவ்வாறு அவர் பேசினார்.

37 comments:

 1. Let's see that when will come that 15 days..

  ReplyDelete
 2. கடைசி வரை எழுதிகிட்டே இருக்கவேண்டும் போல

  ReplyDelete
 3. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மனமொத்த மாறுதலில் வர விரும்புகிறவர்கள் 7598547405 எண்ணை தொடர்பு கொள்ள வும்

  ReplyDelete
 4. Weightage kidaiyatha kidaiyathunu sollikite irukaru g o potamataru vacancies oru nalaiku oru mathiri solraru a adutha tet nadatha plan poduranga 2017 ku oru posting kuda podala

  ReplyDelete
 5. பள்ளிக்கல்வி அமைச்சரால் பிரபலமடைந்த வார்த்தைகள் ஒரு வாரத்திற்குள் 15 நாட்களுக்குள் ஒரு மாதத்திற்குள் ஆனால் எந்த ஒரு வாரம்? எந்த 15 நாள்? எந்த ஒரு மாதம்? என்பதுதான் உறுதி செய்யப்படாத ஒன்று

  ReplyDelete
 6. தம்பீ இன்னும் நீ திருந்தவே இல்லியா.
  அட கடவுளே.

  ReplyDelete
 7. நாம் அனைவரும் SPECIAL teacher.அதனால் தான் நமக்கு speciala இந்த ஒரு வாரம்,,15 நாட்கள் என்ற special வார்த்தைகள்.....

  ReplyDelete
 8. Tamil nattula neeraiya per valai ellmma erukkanga avangala vittudu veli nattula erukkavungalukku velai kodukkiringa neenga than vunmaiyana nermaiyana thamilan

  ReplyDelete
 9. Poota puluvuni puliyakottai mantaiya

  ReplyDelete
 10. Ippadiye oolaivittu antha 27000core kollai adikkama vidamatta, athana un ennam

  ReplyDelete
 11. Keelicha nee maangotta mandaya

  ReplyDelete
 12. Any news about lab assisstant

  ReplyDelete
 13. பள்ளியில் 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதை விட 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்என்றால் காலிபணியிடம் அதிகரிக்கும் மாணவர்கள் கற்றல் திறன் அதிகரிக்கும் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி

  ReplyDelete
 14. Special teacher exam எழுதின எல்லாரோட கோடிங் சீட்டு வெளியிடுங்க

  ReplyDelete
 15. "வாய் சொல்லில் வீரன்" இந்த ஆளு

  ReplyDelete
 16. வயது முடிந்தவுடன் போடுவீர்களோ?!

  ReplyDelete
 17. minister told that within 15 days special teachers will be posted. But he didn't tell about other teachers. Am I correct? please explain about that line which was told by minister.

  ReplyDelete
 18. Dai paithiyakara, nee oola viduratha first niruthu

  ReplyDelete
 19. Ada poangappa.... Ippadiya posting poadunga....

  ReplyDelete
  Replies
  1. வாய் சொல் மட்டும் தான் இருக்கு

   Delete
 20. Special teacher candidates omr sheet ellam publish pannanum


  ReplyDelete
 21. படுபாவிகளா..
  என்னா மானாவுக்குடா
  அடுத்த Exam வக்கிறீங்க...

  ReplyDelete
 22. Why are you telling lie you are cheating no one is right speech

  ReplyDelete
 23. இந்திய பள்ளிகளுக்கு இந்திய டெக்னாலஜி இல்லையா மற்றொரு டெக்னாலஜி வாங்னாதான் பணம் கொட்டுமா முதலில் தகுந்த அற்பணிப்புள்ள ஆசிரியர்களை நியமனம் செய்ய சொல்லும் அப்புரம் இதை பற்றி யோசிக்கலாம்

  ReplyDelete
 24. Nama prataiku kalvi thuraiyala vallaiyaganum pola athan entha parathu

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி