4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2018

4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தில்லியில் 4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4,366

பணி: Teacher (Primary)

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

தகுதி: ஹிந்தி, ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் டூ தேர்ச்சியுடன் Elementory Teacher Education, Junior Basic Traning-இல் 2 ஆண்டு டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது Elementary Education-இல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தவறான பதில்களுக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்மப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dsssbonline.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி