Aadhar அட்டை வைத்திருப்பதால் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது ஐகோர்ட்டு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2018

Aadhar அட்டை வைத்திருப்பதால் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை ஐகோர்ட்டில், திவ்யா என்பவர்தாக்கல்செய்துள்ள மனுவில், ‘எனது தாயார் ஜெயந்தி, இலங்கையாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.
இலங்கையில் நடந்தபோரின் காரணமாக இந்தியாவுக்கு வந்து எனதுதந்தையான பிரேம்குமாரை கடந்த 1992-ம் ஆண்டுதிருமணம் செய்தார். எனது தாயார் தமிழகத்தில்தான் படித்துள்ளார்.அவர், இந்தியர் என்பதற்குஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,ஓட்டுநர் உரிமம் என அனைத்து ஆதாரங்களும்உள்ளன.

பணிநிமித்தமாக இத்தாலி சென்று, அங்கிருந்துஅடிக்கடி இந்தியா வந்து செல்வார். கடந்த ஜூலை 1-ந்தேதிஎனது தாயார் சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளதாகக்கூறி அவரை சென்னை விமான நிலைய அதிகாரிகள்கைது செய்துள்ளனர். எனவே விமான நிலையஅதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எனதுதாயாரை விடுவித்து, மீண்டும் இத்தாலி செல்லஅனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.இந்திய குடிமகன்இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்குவந்தது. மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், ‘இலங்கையை சேர்ந்தஜெயந்தியின் இலங்கை பாஸ்போர்ட் கடந்த 1994-ம்ஆண்டோடு காலாவதியாகி விட்டது. அதன்பிறகுமோசடியாக இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.எனவே தான் அவரை விமான நிலைய அதிகாரிகள்கைது செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி டி.ராஜா, ‘ஆதார் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம்உள்ளிட்டவைகளை பெற்றுவிட்டதால் மட்டும் ஒருவர்இந்திய குடிமகன் ஆகி விட முடியாது. அவற்றைஎல்லாம் அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜெயந்திஇலங்கை பிரஜை என்று கூறி, அந்நாட்டு அரசுஅவருக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. எனவே,அவரை விடுவிக்க உத்தரவிட முடியாது. இந்தவழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி