பள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்வது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளை நியமனம் - தமிழக அரசு - kalviseithi

Jul 28, 2018

பள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்வது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளை நியமனம் - தமிழக அரசு

பள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்வது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு ஆணைபிறப்பித்துள்ளது.
பள்ளி கல்வித்துறையின் அரசு முதன்மைசெயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
பள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டு புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும், அரசால் தோற்றுவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யவும், பள்ளி கல்வி துறையை சேர்ந்த இணை இயக்குனர்களை மாவட்டங்களுக்கு சென்று களப்பணி மேற்கொள்ள அனுமதி ஆணை வழங்குமாறு பள்ளி கல்வி இயக்குனர் அரசை கோரியிருந்தார். பள்ளி கல்வி இயக்குனரின் கருத்துருவினை, அரசு கவனமாக பரிசீலனை செய்து அதனை ஏற்கலாம் என முடிவு செய்தது. மேலும் பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அனைத்து இணை இயக்குனர்களும் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று களப்பணி மேற்கொள்ள அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

 அதன் விவரம் வருமாறு:-

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் சி.உஷாராணி சென்னை, திருவள்ளூருக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் வை.பாலமுருகன் தூத்துக்குடிக்கும், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் (மேல்நிலை) எஸ்.சேதுராமவர்மா கோவை, நீலகிரி மற்றும் திருப்பூருக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் எஸ்.உமா விழுப்புரத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி) பூ.ஆ.நரேஷ் காஞ்சீபுரத்துக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் (இணை இயக்குனர் நிலையில்) கே.சசிகலா கரூர், நாமக்கல்லுக்கும், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் சி.செல்வராஜ் திண்டுக்கல்லுக்கும், பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) பி.குப்புசாமி வேலூருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை-நெல்லை பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (தொழிற்கல்வி) எஸ்.சுகன்யாகடலூருக்கும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் எஸ்.நாகராஜன் மதுரை, தேனிக்கும், தொடக்க கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (நிர்வாகம்) கே.ஸ்ரீதேவி தஞ்சாவூருக்கும், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி) சி.அமுதவல்லி சிவகங்கை, புதுக்கோட்டைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடக்க கல்வி இயக்ககத்தின் இணைஇயக்குனர் (உதவிபெறும் பள்ளிகள்) ஆர்.பாஸ்கரசேதுபதி கன்னியாகுமரி, நெல்லைக்கும், மாநில திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர்-2 கே.செல்வகுமார் தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கும், மாநில திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர்-3 பி.பொன்னையா சேலம், ஈரோட்டுக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இணை இயக்குனர் (கள்ளர் சீரமைப்பு) வை.குமார் விருதுநகர், ராமநாதபுரத்துக்கும்நியமிக்கப்பட்டுள்ளனர். நாகை-திருச்சி பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் நாகப்பட்டினம், திருவாரூக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் (பாடத்திட்டம்) பி.குமார் பெரம்பலூர், அரியலூருக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் நா.ஆனந்தி திருவண்ணாமலைக்கும், பள்ளி கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) எம்.வாசு திருச்சிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி