ஆசிரியர்கள் போட்டி தேர்வெழுத சி.இ.ஓ.,க்கள் அனுமதி தரலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2018

ஆசிரியர்கள் போட்டி தேர்வெழுத சி.இ.ஓ.,க்கள் அனுமதி தரலாம்

அரசு பள்ளி ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுத, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அனுமதி வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், உயர்கல்வி படிப்பது, வெளிநாடு செல்வது, சொத்துகள் வாங்குவது, அரசின் பிற துறைகளின் வேலைக்கு போட்டி தேர்வுகளில் பங்கேற்பது போன்றவற்றுக்கு, நியமன அதிகாரிகளிடம், முன் அனுமதி பெற வேண்டும்.

இதன்படி, உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குனரிடம் மனு அளித்து, அனுமதி பெற்று வந்தனர். பள்ளிக்கல்வி துறையில், தற்போது நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டதால், சி.இ.ஓ.க்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இதன்படி, முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம், சி.இ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.எனவே, உயர்கல்வி படிப்பதற்கான அனுமதி பெறுவது, போட்டி தேர்வுகளில் பங்கேற்க அனுமதி பெறுவதற்கு, ஆசிரியர்களின் கோப்புக்களை, சி.இ.ஓ.,க்களே ஆய்வு செய்து, விதிப்படி அனுமதி வழங்கலாம் என, பணியாளர் பிரிவு இணை இயக்குனர், நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி