தமிழகத்திலேயே முதன்முதலாக ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கியூஆர் கோடு பதிந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.
கரூர் அருகே உள்ள வெள்ளியணையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 87 மாணவர்கள், 69 மாணவிகள் என 156 பேர் கல்வி பயில்கின்றனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. அனைத்து மாணவ மாணவியருக்கும் கியூஆர் கோடு எனப்படும் கோடு பதிந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டை மூலமாக மாணவர்களின் செயல்பாடுகளையும், வீட்டுபாடங்களையும் பெற்றோர் தங்களது செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் தர்மலிங்கம் கூறியது: கியூஆர் கோடு மூலமாக மாணவர்களின் செயல்பாடுகள், வீட்டுப்பாடம் போன்றவற்றை பெற்றோர் செல்போன் மூலமாக தெரிந்துகொள்ளலாம். ஆசிரியர்கள் மனோகரன், வெங்கடேஷ், வாசுகி, மகேஸ்வரி, சசிகலா ஆகியோர் கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்டது. இதற்காக பள்ளிக்கல்வித் துறை மூலமாக ஓராண்டு சாப்ட்வேர் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. புதிய பாடப்புத்தகங்களில் உள்ள கியூஆர் கோடு பின்பற்றி ஆசிரியர்கள் இதனை ஏற்படுத்தியுள்ளனர். பெற்றோர் மத்தியில் இந்த அடையாள அட்டை முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார்.
This comment has been removed by the author.
ReplyDeleteCongrats
ReplyDelete