அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 35 ஆயி ரத்து 781 பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வெழுதிய அனை வரின் மதிப்பெண்களும் ஜூன் 14-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் இணையதளத்தில் வெளி யிடப்பட்டது. எழுத்துத்தேர்வானது 95 மதிப்பெண்ணுக்கு நடத்தப் பட்டது.
அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு அதில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) பதிவுகாலத்துக்கு ஏற்ப அதிக பட்சமாக 5 மதிப்பெண் அளிக்கப் படும். இறுதியாக எழுத்துத்தேர்வு மதிப்பெண், பதிவுமூப்பு மதிப் பெண், இடஒதுக்கீடு அடிப்படை யில் பணி நியமனம் நடைபெறும். தேர்வர்களின் மதிப்பெண்பட்டியல் வெளியிடப்பட்ட நிலை யில் அடுத்த நிலையான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை இன்று வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. பணிநியமன அறிவிக்கையில் குறிப்பிட்டபடி, "ஒரு காலியிடத்துக்கு 2 பேர்" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர் வர்கள் அழைக்கப்பட உள்ள னர். சான்றிதழ் சரிபார்ப்புப் பணி அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நடத்துவதற்கான பணி கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் மும்முர மாக நடைபெற்று வருகின்றன. சான்றிதழ் சரிபார்ப்பில் தேவை யான சான்றிதழ்களுடன் (கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், தமிழ்வழி கல்வி சான்றிதழ் போன்றவை) தேர்வர்கள் கலந்து கொள்ளும் வகையில் 2 வாரங்கள் அவகாசம் அளிக்கவும் சான்றிதழ் சரிபார்ப்பை ஒரேநாளில் நடத்தி முடிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் அடுத்த சில தினங்களில் இறுதி தேர்வுப் பட்டியல் பெயர், பதி வெண், எழுத்துத்தேர்வு மதிப் பெண், பதிவுமூப்பு மதிப்பெண், இடஒதுக்கீடு உள்ளிட்ட விவ ரங்களுடன் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து,பணிக்கு தேர்வுசெய்யப்பட்ட சிறப்பாசிரி யர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்னர் பணிநியமன ஆணை வழங்கப்படும். சிறப் பாசிரியர் பணிக்கு ஆரம்ப நிலையில் சம்பளம் ரூ.27 ஆயிரம் அளவுக்கு கிடைக்கும்.
கூடுதல்கல்வித்தகுதிக்கு (பட்டப் படிப்பு, பி.எட். போன்றவை) ஒவ்வொன்றுக்கும் ஒரு இன்சென்டிவ் ( ஒரு இன்சென்டிவ் என்பது 2 இன்கிரிமென்டுகளை குறிக்கும்) வீதம் அதிகபட்சம் 2 இன்சென்டிவ் வழங்கப்படும். அந்த வகையில், உயர்கல்வித்தகுதி உடைய வர்களுக்கு சம்பளம் ரூ.30 ஆயிரத்துக்கு மேல் கிடைக்கும். இதுவரையில் சிறப்பாசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டு வந்தனர். தற் போதுதான் முதல்முறையாக போட்டித்தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
Good luck
ReplyDeleteTq red fort
ReplyDeleteValthukal
ReplyDeleteValthukal
ReplyDeleteLab assistant second list any news
ReplyDeleteLab assistant second list any news
ReplyDeleteSir my no 9751843351
DeleteCall me
When will come CV list only message came CV ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteProtocol nt allowed to say anything to public directly so they r nt officials only receptionist
Deletekalvi seithi admin kku anbana vendukol old news ,fake news devali illatha news pottu elloraiyum kastapada vaikka vendam
ReplyDeleteLab assistant second list varuma
ReplyDeleteList published for SPL teacher CV list
ReplyDeleteList published for SPL teacher CV list
ReplyDelete