ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடக்கும் அடுத்தடுத்த முறைகேடுகள் - TET தேர்வு மூலம் போலியாக ஆசிரியர் நியமனம் நடந்தது எவ்வாறு? - kalviseithi

Aug 29, 2018

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடக்கும் அடுத்தடுத்த முறைகேடுகள் - TET தேர்வு மூலம் போலியாக ஆசிரியர் நியமனம் நடந்தது எவ்வாறு?


தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் அடுத்தடுத்து முறைகேடு புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அதே போன்று ஆசிரியர்கள் தகுதி தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

தமிழக அரசு ஆசிரியர் பணிகளுக்கு ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புகிறவர்களுக்கு முதல் தாள் பேப்பரும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவர்களுக்கு 2-ம் தாள் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தேர்வு நடத்தப்பட்ட போது மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினார்கள். அவர்களில் 34 ஆயிரத்து 979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் ஊழல் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. தேர்வு எழுதியவர்களில் பலர் இதுபற்றி புகார் மனுக்களை அளித்தனர். அதன்பேரில் ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் தேர்வு தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டது.


7½ லட்சம் பேர் எழுதிய தேர்வு தாள்களை மீண்டும் திருத்தி அதில் தேர்வானவர்களின் விவரங்களை இணைய தளத்தில் வெளியிட்டனர். அப்போது ஏற்கனவே தேர்வானதாக அறிவிக்கப்பட்டவர்களில் பலரது பெயர் விடுபட்டு இருந்தது.

சுமார் 200 ஆசிரியர்கள் அவ்வாறு தேர்வாகாமல் விடுபட்டு இருந்தனர். இதுபற்றி ஆய்வு செய்தபோது அந்த 200 பேர் தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்தது. போலி மதிப்பெண்களை அளித்து அந்த 200 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு இருந்தது அம்பலமானது.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து பதிவு செய்யப்பட்ட போது மதிப்பெண்களை திருத்தும் தில்லுமுல்லு நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி விரிவாக விசாரணைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ளவர்களே சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

போலி மதிப்பெண் பெற்று தேர்வு ஆனதாக சந்தேகிக்கப்படும் சுமார் 200 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வில் நடந்த தில்லுமுல்லுகள் முழுமையாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

35 comments:

 1. Senkkotaiyan irukiravaraikum ippadithan news varum

  ReplyDelete
 2. Ella examum apadithan nadakudhu.adharam irundhal visaranai seivanunga.illai endral therindhum oothimoodittu poiduvanunga.2012 first tet one and half our examleye first mark 143/150 in science.question out nu ellorukum therinjum mooditanunga.adutha tnpsc il stronga maatikitanga.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. trb special teachers exam resultium maru mathipeedu panunka. apathan innum niraya unmayikal velivarum.kuripaka drawing tailoring and music

  ReplyDelete
 5. Revised result 2017 website la epo publish achu

  ReplyDelete
  Replies
  1. Publish aagale fraud pannavangalukku tet marksheet kodukaama vittutaanga.
   Mark sheet netla vittapa enaku mark sheet download aagala en mark 130.100. 110 nu silar comment potaanga.
   Avanga thaan fraud pannavanga

   Delete
 6. Replies
  1. Summa lusu Mari pesathenga,nenga kastapattu padichi pass agirntha ipti pesa matenga

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 7. Ennangada easya cancel panna soldringa kasta pattu padichavangaloda nilama? Unkaglkenna nogama cancel panna soldringa padichu parungada yevlo kastamnu theriyum pass pandradhu

  ReplyDelete
  Replies
  1. Polytechnic yaiyum ippadi thaane pannaanga.
   Rajalingam polytecnic cancel panathu sarithaan nu veera vasanam pesinaare. Tet kum vera vasanam media la pesuvaara.

   Delete
 8. Katiruntha selai ah kuda uthari check panunanga bit irukumnu, ena alapara, gr 1 kuda ipdi nadanthurukathu

  ReplyDelete
 9. Ithuku vidivae illaya sEngottaya mudincha alavukku suruttitiya sengottya

  ReplyDelete
 10. entha news channellayu varleye

  ReplyDelete
 11. Replay please sir. nermaiya pass pannavangala enna sir pannavanga avangalaiyum cancel pannavangala replay pannunga sir.

  ReplyDelete
 12. its fake news 2017 la intha mathriri nadakula entha revised result varla , don't publish fake news .i wrote the exam intha mathiri ethum nadakula .

  ReplyDelete
 13. Appo nermaiya ealuthinavanga nilamai.?????

  ReplyDelete
 14. Exam hall ku porathukku munnady mattum epdi check paneenga,,,,

  Ippo ?

  ReplyDelete
 15. அப்பவே சொன்னேன்...
  யாருமே கேக்கல....

  ReplyDelete
 16. B.ed padijavanga kudiya sekkiram visam kudiju savanganaaa

  ReplyDelete
 17. Ithula senority la job poda matangalam.ulla perujalingaluku innoru vaipaga .innoru examam.enna koduma sir ithu

  ReplyDelete
 18. Pass ana ellorukum velaiya podunga appothan arasu palli nalla odum palligala studends seruvanga

  ReplyDelete
 19. Pass ana ellorukum velaiya podunga appothan arasu palli nalla odum palligala studends seruvanga

  ReplyDelete
 20. Puthiya thalaimurai news LA tet 2017 muraikedu Patti poduranga.thappu seithavangalala nermaiya exam eluthunavanga pathika pada kudathu.thappu pannavangaluku kandipa punishment kodukanum. Athu than correct

  ReplyDelete
 21. Video va nalla parunga fds .mark thappana valila add pannuvanga galuku mark list cancel num.athai trb yae kandupidijathavum solli irukkanga so tet 2017 cancel panna mattanga thanay

  ReplyDelete
 22. Polytecnic nermaiya exam eluthiyavanga enna paavam pannaanga

  ReplyDelete
 23. ஊழல்னு தெரியுது யாரும் கண்டுக்காம இருந்தால் எப்படி .
  Exam cancel பண்ணுன என்ன பண்ணலான என்ன வேலை யாருக்கும் கிடையாது.

  ஏன் இன்னும் கொஞ்சம் நாளுல govt school லே இருக்காது போல. போற போக்க பாத்தா அப்டி தான் தெரியுது.

  எல்லாம் பாத்து சலிச்சி போச்சி tet ye வேணாம் சாமி ஆள விடுங்க

  Trb la ஊழல் na exam வைக்குறத Tnpsc டda குடுங்க da

  ReplyDelete
 24. Cancel ஆசிரியர் தகுதித் தேர்வு.

  ReplyDelete
 25. 2012 லேயே blank answer sheet யை fill செயத trb ஊழியர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் சிபிஐ விசாரணை செய்தால் மூட வேண்ய நிலைமை வரும். CBI விசாரணை தேவை 2012 ல் பணியமர்ததப் பட்டவர்களிடமும் சிபிஐ விசாரணை தேவை. ஊழல் கூட்டத்தை ஒழிப்போம்.

  ReplyDelete
 26. திருட்டு ஆசிரியர்கள் கல்வி வெளங்கிடும்.......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி