மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது - kalviseithi

Aug 29, 2018

மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது


ஆசிரியர் தினத்தையொட்டி, மாவட்ட வாரியாக, 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களில் முக்கியமாக, பொது தேர்வுகளுக்கான, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களில், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டது.இதில், ஆங்கில வழி மாணவர்களுக்கே, அதிக உதவித்தொகை கிடைத்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்களும், தமிழ் வழி மாணவர்களும் பின்தங்கினர். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆர்வமும், படிப்பின் மீது குறைந்தது.

இதை மாற்றும் வகையில், தமிழ் வழியில் படித்து, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டில், தமிழ் வழியில் படித்து, முன்னிலை இடம் பெற்ற திறமையானமாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தலா, 15 மாணவர்கள் என, ஒவ்வொரு மாவட்டத்திலும், 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு, காமராஜர் பெயரில் விருது மற்றும் சான்றிதழ்; பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 2வுக்கு, 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதிநடக்கும் ஆசிரியர் தின விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி