மோட்டோ நிறுவனம் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் செய்யக்கூடிய மோட்டோ இஸட் 3 என்னும் புதிய மாடல் செல்போனை சிகாகோவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
செல்போன் வர்த்தகத்தில் குறிப்பிடத்தகுந்த இடத்திலிருக்கும் மோட்டோ நிறுவனம் மற்ற நிறுவனங்களிலிருந்து மாறுபட்ட புதிய அம்சங்களைத் தனது தயாரிப்புகளில் கொண்டுவர முயற்சி செய்கிறது. அந்தவகையில் தற்போது மோட்டோ இஸட் 3 என்னும் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த தலைமுறை நெட்வொர்க்கான 5ஜி, இதில் சப்போர்ட் ஆகும் வண்ணம் தயாரிக்கப்பட்டிருப்பது முக்கியமான இதன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் தற்போதைய நிலவரங்களின்படி,வெரிஸான் என்னும் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் சப்போர்ட் செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. மற்ற நிறுவன 5ஜி சேவை பற்றி தெரிவிக்கப்படவில்லை.
சிறப்புகள்:
6 இன்ச் திரை, 8.1 ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்,835 SoC, 8 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 12 மெகா பிக்ஸல்பின்பக்க கேமரா, 4GB RAM, 64 GB ROM ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.33,000. வெரிஸானில் பிரத்யேகமாக ஆகஸ்ட் 16 முதல் விற்பனைக்குவருகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி