இது தொடர்பாக நிதித்துறை இணையமைச்சர் பிரதாப் சுக்லா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையுடன் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.2,433 கோடி அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-2018 நிதியாண்டில் குறைந்தபட்ச இருப்புத் தொகைக்காக அபராதம் விதித்த வங்கிகளில் 70 சதவீதம் அபாரம் விதித்த பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரூ.590 கோடி அபராதம் விதித்த HDFC வங்கி 2-ம் இடத்திலும், ரூ.530 கோடி அபராதம் விதித்த Axis வங்கி 3-ம் இடத்திலும் உள்ளது.
குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததால் ரூ.317 கோடி அபராதம் விதித்த ICICI வங்கி 4-வது இடத்திலும், ரூ.211 கோடி அபராதம் விதித்த PNB 5-வது இடத்திலும் உள்ளது. ஜன்தன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரிய புடுங்கி ய இருப்பாங்களோ? நீரவ் மோடி,விஜய் மல்லையாவ விட்ருங்க....காசு இல்லாமல்தான் low balance வச்சிருக்கான்.அவன்கிட்டையே அவனுக்கு தெரியாம ஆட்டைய போடூரிங்க..வாழ்க வாங்கிகள் sorry வங்கிகள்..
ReplyDelete