BE - படிப்புகளில் 1 லட்சம் காலியிடங்கள் :பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2018

BE - படிப்புகளில் 1 லட்சம் காலியிடங்கள் :பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவது ஏன்?

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு ஒதுக்கீடு பெற்ற 1 லட்சம் இடங்கள் வரை காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவது 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,72, 581 இடங்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலை கழகம் நடத்துகிறது. பொது பிரிவிற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைந்தது. சிறப்பு பிரிவு பொது பிரிவு என மொத்தமாக 74,601 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.

 இதன் காரணமாக 97,980 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஒதுக்கீட்டில் மேலும் 3000 மாணவர்கள் வரை ஏற்கனவே தேர்வுசெய்த இடங்களை ரத்து செய்யலாயம் என எதிர்பாக்கப்படுவதால் அரசு ஒதுக்கீட்டில் 1 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

 கல்வி முறையில் மற்றம் கொண்டுவந்தால் மட்டுமே பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடியும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த கல்வி ஆண்டுகளில்  ஒப்பிடுகையில் நடப்பாண்டில் மிக குறைந்த மாணவர்கள் சேர்க்கையே நடைபெற்றுள்ளது. 2017, 2018 ஆம் கல்வியாண்டில் 86,355  மாணவர்கள் வரை பொறியியல் படிப்புகளில் சேர்க்கைப் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி