கூகுள் டிரைவில் உள்ள நீண்டநாள் வாட்ஸ்ஆப் தகவல்களை நாம் எவ்வாறு பாதுகாப்பது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2018

கூகுள் டிரைவில் உள்ள நீண்டநாள் வாட்ஸ்ஆப் தகவல்களை நாம் எவ்வாறு பாதுகாப்பது?



கூகுள் டிரைவில் உள்ள நீண்டநாள் வாட்ஸ்ஆப் தகவல்களைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.

உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் கணக்கு பயன்பாட்டில் இருக்க வேண்டும். கூகுள் டிரைவில் உள்ள தகவல்கள் உங்கள் போனில் பதிவிறக்கம் செய்ய ஏதுவாக காலியான இடம் இருக்க வேண்டும். கூகுள் பிளே, ஆன்ட்ராய்ட் பிரிவு 2.3.4 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். பின்னர், வாட்ஸ்ஆப்பில் உள்ள செட்டிங்ஸ் பிரிவில் சென்று சாட்ஸ், சாட் பேக்கப்-பை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் வாட்ஸ்ஆப் - ஐ ரீ-இன்ஸ்டால் செய்தால் அனைத்து பேக்கப்களும் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும். இந்த செயலின்போது Wi-Fi இணைப்பில் இருந்தால் உடனடியாகப் பதிவிறக்கம் செய்யலாம். இல்லை டேட்டாவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதேபோல், ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை கூகுள் டிரைவில் பேக்கப் செய்வதற்கு வாட்ஸ்ஆப் செட்டிங்கில் சென்று சாட்ஸ், சாட் பேக்கப், பேக்கப் டூ கூகுள் டிரைவ்-ஐ கிளிக் செய்து, பின்னர் பேக்கப் செய்வது மாதந்தோறுமா அல்லது தினந்தோறுமா என்பதைத் தேர்வு செய்தால் போதும். கூகுள் டிரைவிற்கு தகவல்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்துவிடலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி