காவலர் தேர்வு முடிவு வெளியீடு போலீஸ் வாரிசுகள் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2018

காவலர் தேர்வு முடிவு வெளியீடு போலீஸ் வாரிசுகள் எதிர்ப்பு

திண்டுக்கல், போலீசார், அமைச்சுப்பணியாளர், தீயைணப்புத்துறையினரின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அறிவிக்காமல், போலீசார் எழுத்து தேர்வு முடிவுகளை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து இளைஞர்கள் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில் இரண்டாம் நிலை போலீசாருக்கான எழுத்து தேர்வு மார்ச் 11ல் நடத்தப்பட்டது. பணிநியமனத்தில் போலீசார், அமைச்சுப்பணியாளர், தீயணைப்பு வீரர்கள் வாரிசுதாரர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் பணி நிறைவு பெற்றாலும் போலீசாரின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு உண்டு. ஆனால், பணி நிறைவு பெற்ற அமைச்சுப்பணியாளர் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு கிடையாது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.இந்நிலையில் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் ஆக.11ல் எழுத்து தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டது.

இந்த தேர்வுதான் எங்களுக்கு இறுதி வாய்ப்பு, வாரிசுதாரர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வாரிசுதாரர்களின் தேர்வு முடிவுகளையும் சேர்த்து வெளியிட வலியுறுத்தி திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, எஸ்.பி., சக்திவேலுவிடம் மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி