சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம் - உயர்நீதி மன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2018

சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம் - உயர்நீதி மன்றம் உத்தரவு!

சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
  • மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர் அறிவானந்தம். இவரது அலுவலகத்தில் கடந்த 17.10.2017ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 50 பறிமுதல் செய்தனர். உடனடியாக அவரை கள்ளிக்குடிக்கு மாற்றினர். பின்னர் கடந்த ஜூலை 31ல் ஓய்வு பெறுவதற்கு முன்தினம் அவரை சஸ்பெண்ட் செய்தனர். அந்த உத்தரவை ரத்து செய்து, ஓய்வுபெற அனுமதித்து தனக்குரிய பணப்பலன்களை வழங்கக் கோரி அறிவானந்தம் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘குற்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது என்ற காரணத்திற்காக ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையில் பங்ேகற்காமல் இருக்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுதாரர் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணையை தினசரி அடிப்படையில் விரைவாக விசாரிக்க வேண்டும். 7 வேலை நாளுக்கு மேல் விசாரணையை ஒத்திவைக்காமல் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கும் 1981ம் ஆண்டு சட்டத்தில் சில திருத்தம் செய்யலாம். இதன்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு அரசு ஊழியருக்கு முதல் 6 மாதத்திற்கு 75 சதவீத பிழைப்பூதியம் வழங்க வேண்டும்.

6 மாதத்திற்குள் விசாரணை முடியாமல் இருந்தால், சம்பந்தப்பட்டவர் ஏதேனும் நீதிமன்ற உத்தரவு பெறாத நிலையில் 75 சதவீத பிழைப்பூதியத்தை 50 சதவீதமாக குறைக்கலாம். ஓராண்டுக்கும் மேல் விசாரணை இழுத்தடிக்கப்பட்டால் அதிலிருந்து 25 சதவீதத்தை குறைக்கலாம். சஸ்பெண்ட் ஆகி ஓராண்டுக்கும் மேலான நிலையில் அவர் மரணமடைந்தால், விசாரணை தாமதத்திற்கு அவர்தான் காரணம் எனத் தெரிய வந்தால், அவரது வாரிசுதாரர்களுக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டியதில்லை,’’ என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி