இரங்கற்பா... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2018

இரங்கற்பா...

தமிழே.. தமிழே.. 

போய் வா..

தமிழின் தலைமகனே..

உன்
காலம் முடிந்தது..

இது-
நர்சரிகளின் கலிகாலம்..

தமிழே நீ..

போய் வா.. 
இரைச்சல் ஏதுமின்றி..

உன்னோடு-
மெல்லத் தமிழ் இனி சாவும்..

ஏழைகள்
விதவைகள்
சிறுபான்மை சமூக மக்கள்
ஆசிரியர்கள்
அரசு ஊழியர்கள்
இலக்கியப் பதிப்பாளர்கள்
கதை சொல்லிகள்


எல்லோருக்கும்
இது
பேரிழப்பே..

போய் வா..
இரைச்சல் ஏதுமின்றி..
 *
 *சமூகநீதி பேச 
சமத்துவம் பேச
இருந்த ஒரே 
தலைவனும் நீ 
மட்டும்தான்..

 *பெரியாரின் 
 பேரியக்கத்தின் 
கடைசிதூணும் 
நீ மட்டும் தான்* ..

உன்னோடு 
அரசியல் செய்ய 
இப்பொழுது 
யாருக்கும் 
தரம் இல்லை...

நீதான்
அழகு தமிழில்
எப்போதும்
பேசினாய்..
எமக்கும்
பேசக் கற்றுக் கொடுத்தாய்..

பேசுபவர்களைக் கவனிக்கக் 
கற்றுக் கொடுத்தாய்..

ஊரெங்கும்
தமிழே பேராய்
அமைய
நீதான்
வழி வகை செய்தாய்..

உன்னோடு
அடங்கப் போகிறது
தமிழ் வழிக் கல்வி நிறுவனங்களும்..

இனி-
எவருண்டு
அதன் குறை கேட்க?

நீ..

போய் வா..

இரைச்சல் ஏதுமின்றி*..

உன் மீது
விமர்சனங்கள் உண்டு..

உன்னோடு
முரண் தொடைகள் உண்டு..

ஆனாலும்..

நீ-
எழுதிய பல வார்த்தைகள்
தலைமுறை தாண்டியும் நிற்கும்..

உன்
நயம் கலந்த நகைச்சுவைகள்
எப்போதும்
எமைச் சிரிக்க வைக்கும்..

எமக்குத் தெரியும்..

உம்மை அடக்கமே செய்தாலும்
நீ எவருக்கும் அடங்காதவன்..

மெரினா கடற்கரையில்
ஓய்வெடு..

எதிரே 
கோட்டையில் பறக்கும் மூவர்ணக் கொடி
எப்போதும்
உனக்கு வந்தனம் செய்யும்..

நீதானே..
கொடியேற்றும் உரிமையை
முதல்வருக்கும் பெற்றுத் தந்தாய்..

போய் வா..

தமிழின் தலைமகனே..
இரைச்சல் ஏதுமின்றி.. 

இனி
முதலாளித்துவம், பார்பனிய 
ஆதிக்கம், சாதிய வன்முறை 

தொடரட்டும் நீ

மீண்டும் 

பிறக்கும்வரை......  

 *அ.சின்னராஜ், தேனி...

5 comments:

  1. அருமை அருமை

    ReplyDelete
  2. என் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் உன் வரிகள் அருமை அண்ணா....

    ReplyDelete
  3. கவிதையின் அனைத்து வார்த்தைகளும் அருமை. இனி தமிழ் இன மானம் காக்க யாருமில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி