கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து வயது மூப்பின் காரணமாக அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இன்று மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். கருணாநிதி மறைவுக்கு ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து தமிழகத்தில் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று புதுச்சேரியிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரைக் கம்பத்தில் திமுக கொடி: கருணாநிதியின் வீட்டில் அரைக் கம்பத்தில் திமுக கொடிகள் பறக்கின்றன.
Rip
ReplyDeleteRip
ReplyDelete