தொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2018

தொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம்

தொடக்கப் பள்ளிகளில் நிலுவையில் உள்ள பிரச்னைகளைமுடிப்பது குறித்து ஆலோசிக்க, முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில் நடைபெற உள்ளது.

தமிழக அரசின், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்,உள் கட்டமைப்பு மேம்பாடு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, 'எமிஸ்' என்ற, மாணவர் விபரங்களை டிஜிட்டல் தொகுப்பில் சேர்ப்பது என, பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.அதேபோல, ஆசிரியர்களின் நியமனம், பதவி உயர்வு குறித்த பிரச்னைகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான நிர்வாகபணிகள் போன்றவற்றிலும், பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

இந்தப் பணிகளின் நிலைமை என்ன; அவற்றின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, சி.இ.ஓ.,க்கள் மற்றும் டி.இ.ஓ.,க்களுக்கு, சென்னையில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதற்கான கூட்டம், வரும், 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் நடக்கும் என, தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கு வரும் முன், தங்கள் மாவட்ட, பள்ளிகளின் வழக்குகள் நிலை, பள்ளி வாரியாக ஆசிரியர் காலியிட விபரம், உள்பட, 29 வகை பட்டியல்களை, வரும், 6ம் தேதிக்குள், deemeetingagenda@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

1 comment:

  1. ,Respected sr,sgt tracher request u ...pls fill up in primary teacher Union & ADW school lot of vacant in this school...help me ....save for student life ...2013 kuraivana post podapattathu sr....thank u sr

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி