
ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை விதிக் கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதி முறையை கொண்டு வந்துள்ளது.
அதோடு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடைவிதிக்கும் வகை யிலும் நடவடிக்கையை கடுமையாக்க முடிவுசெய்துள்ளது.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், அரசு ஆசிரி யர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்உள் ளிட்ட பணியிடங்களை நிரப்ப ஆசிரி யர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு களை நடத்திவருகிறது.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வை யும் அவ்வாரியமே நடத்துகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலி டெக்னிக் விரிவுரையாளர் தேர்விலும், தகுதித்தேர் விலும் மதிப் பெண்ணில் திருத்தம் செய்து முறைகேடு நடந்திருப்பதை ஆசி ரியர் தேர்வு வாரியமே ஆய்வு மூலம் கண்டுபிடித்தது. விடைத் தாள்களை ஸ்கேன் செய்து மதிப் பெண் பதிவுசெய்யப்படும் நிலை யில் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருப் பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையா ளர் தேர்வை ரத்துசெய்த தேர்வு வாரியம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித்தேர்வில் மதிப் பெண் முறைகேட்டில் ஈடுபட்ட 200 தேர்வர்களின் தேர்ச்சியை ரத்து செய்துள்ளது. அவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
நம்பகத்தன்மை
டிஎன்பிஎஸ்சி-யுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவான அலுவலர் களையும், பணியாளர்களையும் வைத்துக் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மிக வேகமாக தேர்வுகளை நடத்தி முடிவுகளை விரைவாக வெளியிடுகிறது என்று தேர்வர்கள் பாராட்டவே செய் கிறார்கள். எனினும், அண்மைக் காலமாக நடந்துள்ள தவறுகள், அதன் காரணமாக தேர்வு ரத்து நடவடிக்கை, மதிப்பெண்ணை திருத்தியவர்கள் தகுதிநீக்கம் ஆகியவை தேர்வு வாரியத்தின் மீது லேசான சந்தேகப் பார் வையை உண்டாக்கியுள்ளது. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படுவதால் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை தேர்வர்களால் உதாசீனப்படுத்த இயல வில்லை.இந்த நிலையில், தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்ப தாரர்களை தண்டிக்கும் வகையில் விதிமுறை களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடுமையாக்கியுள்ளது.
அதன்படி, ஆசிரி யர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வு களில் தவறு செய்யும் விண்ணப் பதார்ரகள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கும் வகை யில் புதிய விதிமுறை கொண்டுவரப் பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கறுப்பு பட்டியலில்..
புதிய விதிமுறையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித் தேர்வில் மதிப்பெண்ணை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 200 விண்ணப்ப தாரர்கள் மீது முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்த தேர்வையும் எழுத முடியாது. அவர்களின் பெயர், முகவரி, பிறந்த நாள், கல்வித்தகுதி, இடஒதுக் கீட்டுப்பிரிவு உட்பட அனைத்து விவரங்களும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.எனவே, அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முயற்சி செய் தால் அவர்களின் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.
தவறு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் விண்ணப் பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடை விதிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
Yen da thavaru seiya thunai poravanga neenga ungalukku enna Marana thandanaya
ReplyDeleteathane ungaluku ena thandai..?so thavaru seium candidates ku thandainai kuduthamatum pothathu antha thavaruku kaaranamana aatchiyalarkal athirikalaium udane dissmiss seithu jail thandai kodduthu kolaiyaducha sothukalai parimuthalseithu 500 crore rupai fine potu naatumakalidam opadaikavendum..apathan ithukalam oru niranthara mudivu varum..
Deleteநண்பர்களே கடைசி கருத்துககளை கவனமுடன் படிக்கவும்.
DeletePanam vanganaungalukku Enna thandana
ReplyDelete2017 exam cancel panna mattanga illa (tet
ReplyDelete2017 exam cancel panna mattanga illa (tet
ReplyDeleteThervarkal thaan ulle pukunthu mathipennei thiruthinaarkala???????? Yaarai kappaatra intha mudivu? Sampathapattavanga meethu enna action eduppinka?
ReplyDeleteAppo inda year no exam no posting appadithane idai vaithu konde inda yearai mudithu veduvargal....
ReplyDeleteOMR Sheet கூட fill பண்ணியவர்கள்(2012 முதல்) மீது நடவடிக்கை தேவை. சபிஐ விசாரணை தேவை
ReplyDeleteHeeee Heee , சபிஐ விசாரணை தேவை innu paddichalay ennaikku antha சபித்தா than gnapakathuikku varangga , Heeee Heeeeeeeee Hee
Deleteஅப்போ இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் TRB ஊழியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் கிடையாது... அப்படித்தான....
ReplyDeleteபாலிடெக்னிக் தேர்வு போல் இந்த தேர்வும் மறு தேர்வு வைக்கவேண்டும்..
ReplyDeletemutta pasanga
ReplyDeleteNalla kettukonga. TRB idha vache.. indha varushatha ottiruvaan.. apram adutha varusham fulla cancel pannalaama venaama nu discuss pannuvaanunga... apram.. trb ya kalaikalaama venaama nu oru discussion pogum..
ReplyDeletePass pannadhavan muraikedu.. cbi nu dialogue pesuvaanga... pass pannavanga.. thalai la podradhuku oru thundu vaangi vachikitu.. ukkaara vendiyadhu thaan.. idhu thaan ozhunga padichi pass panravan nilamai.. nammala kandukavum aal illa..
How are you going to punish the corrupted officials?
ReplyDeletetavaru seiya vaipavarkalla neekal thanayaa (trb and arasiyalvathikal) travaru seipavanaiveda tavaru seiya toondupavanakuthan athika thandanai. so seveire punished to trb department and involved politicans.
ReplyDeleteஇனி கல்யாணம் நடந்தால் என்ன நடக்காமல் போனால் என்ன? போங்கடா நீங்களும் உங்க நடவடிக்கைகளும்.
ReplyDeleteஇதற்க்கு அரசியல்வாதி தான் காரணம்
ReplyDeleteNow only enquiry start. Maybe enquiry take minimum 2 years. Bcoz of it posting will appoint 2021 only. One political leader asked CBI enquiry. Maybe govt will appoint retd honourable judge , enquiry committee.
ReplyDeleteசரியான தண்டனை வேண்டும் தவறு செய்தவர்கள் வாங்கிய
ReplyDeleteஅனைத்து பட்டங்களும் செல்லாது என்றும் எந்த தேர்வும் இனிமேல் எழுதமுடியாத படி செய்யவேண்டும் தவறுக்கு காரணமாக இருந்தவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் மேலும் இருவருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்
பணம் கொடுத்தவர்களுக்கு கருப்பு பட்டியல் என்றால் பணம் வாங்கியவர்களுக்கு சிறப்பு பட்டியாலா?
ReplyDeletethavarukku ella karanamum TRB mattume.mattavargalal onntum seya mudiyathu.sammanthapatta officers thandikkapada vendum.
DeleteTrbக்கு ஒரே ஒரு கேள்வி...
ReplyDelete29.04.17 & 30.04.17ல் நடந்த TETல் முறைகேடு...
26.09.17ல் நடந்த பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு..
அப்போ இடையில் 2.07.17ல் நடந்த PGTRBல் முறைகேடு இல்லையா??
பாலிடெக்னிக், TET இரண்டுமே ஒரே வகையான data entry முறைகேடு... polytech cancel பண்ணீங்க.. அப்போ TET நிலைமை என்ன??
இடையில் நடந்த PGTRB முறைகேடு கண்டறியப்பட்டால்...posting போட்ட எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு மறுதேர்வு வைப்பீர்களா??.. reexam வச்சா.. நேர்மையானவர் தண்டிக்கப்பட மாட்டாரா?
Exam நீங்க தான் conduct பண்றீங்க... answer sheetஅ நீங்க தான் govt officials வச்சி transport பண்றீங்க.. scanning உங்க trb officials இல்லாம நடக்கப் போறது இல்ல...
Scan பண்ணது மட்டும் தான்data methodexக்கு போகுது...
இப்போ... தேர்வை ரத்து செய்றீங்க னா... அப்போ உங்க மேல தப்பு இருக்கா?? ஏன் ஒரு govt/trb officials arrest ஆகல...??
உங்கள் தரப்பில் தவறுகள் நடக்கவில்லையெனில்... தேர்வு ரத்து எதற்கு??
தேர்வு எழுதும் பலரில் சிலர் மட்டுமே தேர்வாகிறார்கள்.. 90% தேர்வாகாதவர் மட்டுமே... நிறைய பேர் கேக்றாங்க என்கிற ஒற்றை வார்த்தையில் யேர்வை ரத்து செய்வது நியாயமா???
Blacklist பண்ணீட்டீங்க... அவங்க அடுத்த முறை தேர்வு எழுத அனுமதி இல்லை... சூப்பர்... அவங்க யாரு னு எங்களுக்கு எப்படி தெரியும்... அடுத்த முறை அவர்கள் உள்ளே வர மாட்டார்கள் என்பது எப்படி நாங்கள் கண்டறிவது...??
ReplyDeleteபோங்கபா தேர்வே வைக்கல இதற்கு பேர தேர்வு வாரியமா செம காமடி (Tet trb one year aachu அக்டோபர்ல 6 7 Tet exam ena aachu)
ReplyDeleteBlock list names veliyidavendum.
ReplyDeleteAll tet pass candidates names list PDF veliyidavendum
ReplyDeletePongada kena pasangala...
ReplyDeletethappu pannna trb and arsiyal vathi enna thandamnai
ReplyDeleteethanai kaalamthan emartuvar entha natyilaa.. tamil natyilaa..
ReplyDeleteAmaisar tavaru seithal vaal vaal muluvathum election la nikka mudiyathunu sollunkada.
ReplyDeleteநண்பர்களே trb கல்லாவில் பணம் சேர்த்த பணபேய்களின் கூட்டம்.இப்போது உண்மைகள் தெரியவந்தவுடன் பயத்தில் தேர்வெழுதிய நம் மீது பழியை சுமத்த நினைக்கிறார்கள். தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள்.இவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படுவது.நம் நலனுக்காக அல்ல.அவர்கள் பணப்பையை விரிவுபடுத்த மட்டுமே. நல்ல நிலை உருவாகும்வரை உங்கள் இலட்சியம் வெறும் கனவே.விழித்திடுங்கள்.
ReplyDeleteநண்பர்களே! சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் அரவக்குறிச்சி இடைத்தேர்தளில் சுமார் 1300 விவசாயிகள் போட்டியிட்டு, தமிழக அரசின் கவனத்திற்கு கோரிக்கையை கொண்டு சென்று விவசாயிகள் வென்றார்கள். இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. நாமும் திருவாரூர், திருப்பரங்குனறம் இடைத்தேர்தலில் மனுத்தாக்கள் செய்தால் போதும். பொதுத்தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம். தேர்தலில் போட்டியிட நமக்கு தகுதி உள்ளது. TET தகுதித் தேர்வில் போட்டியிட கூட அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை என்பதை உணர வைப்போம்.
ReplyDeleteநிச்சயம் block list வெளிப்படையாக வெளியிடவேண்டும்
ReplyDeletenichayamaha name wise black list veliyida vendum,appothuthan inimel tavaru nadakkathu.ethu pol athe timeil nadaipetta PGTRB ill miga periya thavaru nadanthirukka vaippu athigam undu, PGTRB 2017 OMR veliyida yarum ketkavillai.
ReplyDeleteCmcell petition podunga.. PGTRB and special teacher OMRs check panna solli..
ReplyDeleteEllaroda OMRs um public ah vida solli podunga.. TET, polytech, PGTRB and special teacher