SC, ST - வகுப்பினர் இன்னொரு மாநிலத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2018

SC, ST - வகுப்பினர் இன்னொரு மாநிலத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ஒரு மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட எஸ்சி, எஸ்டி இனத்தவர்,
அவர்களது சமூகம் எஸ்சி, எஸ்டி பிரிவினராக பட்டியலிடப்படாத  இன்னொரு மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஒரு மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட எஸ்சி, எஸ்டி பிரிவினர்,  அவர்களது சமூகம் எஸ்சி, எஸ்டியாக பட்டியலிடப்படாத  இன்னொரு மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோர முடியுமா? என்று பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அதையடுத்து இந்த விவகாரம், உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர். பானுமதி, எம். சந்தனகெளடர், எஸ். ஏ. நசீர் ஆகியோர் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ஓர் மாநிலத்தில் இருக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பணிபுரிவதற்காக புலம் பெயர்ந்து வேறொரு மாநிலத்துக்கு வருகின்றனர். அவ்வாறு வந்தவர்களின் சமூகம், புலம் பெயர்ந்த மாநிலத்தின் எஸ்சி, எஸ்டி பட்டியலில் இல்லை எனில் அவர்களால் இட ஒதுக்கீடு கோர முடியாது என்று 4 நீதிபதிகள் ஒருமனதாக முடிவெடுத்தனர்.
எனினும்,  மத்திய அரசின் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு கொள்கை தான் தில்லியில்  நடைமுறையில் இருக்கிறது என்று கூறி மற்ற 4 நீதிபதிகளின் ஒருமித்த முடிவை நீதிபதி ஆர்.பானுமதி மறுத்தார்.

இறுதியாக, அரசில் சாசன அமர்வில் இருந்த நீதிபதிகள், 4:1 பெரும்பான்மையில், தில்லியைப் பொறுத்தவரை மத்திய அரசின் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு கொள்கை ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் மாநிலங்களில் அது ஏற்றுக் கொள்ளப் படாது என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி