11, 12ம் வகுப்பு மதிப்பெண் இணைந்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கிடையாது. தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் - செங்கோட்டையன் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2018

11, 12ம் வகுப்பு மதிப்பெண் இணைந்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கிடையாது. தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் - செங்கோட்டையன் அறிவிப்பு! +2 பொதுத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் குறைப்பு மற்றும் 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது என்ற மிக முக்கிய அறிவிப்புகளை தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. வரும் கல்வியாண்டு முதல் உயர் கல்விக்குச் செல்ல 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே போதும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண் 1,200ல் இருந்து 600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 11, 12ம் வகுப்பு மதிப்பெண் இணைந்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கிடையாது. தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

11ம் வகுப்புப் பாடங்கள் மிகவும் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றும், 10, 11, 12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் மன அழுத்தம் இருப்பதாகக் கூறுவதையடுத்தும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, பிளஸ் 1 தேர்வுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும், ஆனால் மதிப்பெண் உயர்கல்விக்கான சேர்க்கையின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

5 comments:

 1. தனியார் பள்ளிக்கு சாதகமாகும்.....

  11ஆம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவன் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றான் என்றான் அவன் உயர் நிலை கல்வியை தொடர முடியு?

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. முன்னால் பள்ளிக்கல்வித்துறை செயலர் உயர்திரு.உதயசந்திரன் அவர்கள் வகுத்தளித்த 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11 & 12-ம் வகுப்பு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பும் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது...

  ReplyDelete
 4. தனியார் பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு துணைப்போன கல்வி அமைச்சர்

  ReplyDelete
 5. முன்னால் பள்ளிக்கல்வித்துறை செயலர் உயர்திரு.உதயசந்திரன் அவர்கள் வகுத்தளித்த 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11 & 12-ம் வகுப்பு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பும் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது...
  11-ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள அவ்வளவு அரிய பெரிய தகவல்களும் அதில் கையாளப்பட்டுள்ள புதிய முறைகளும் கிடப்பில் போடப்படும்..
  11-ம் வகுப்பு மாணவர்கள் இனி மிக அருமையாக படித்து பொதுத்தேர்வை எழுதுவர்...நன்றி...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி