பணியில் சேர்ந்து 20 ஆண்டு கழித்து உண்மைத்தன்மை : தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் அதிர்ச்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2018

பணியில் சேர்ந்து 20 ஆண்டு கழித்து உண்மைத்தன்மை : தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் அதிர்ச்சி!


பணியில் சேர்ந்து 20 ஆண்டு கழித்து, கல்விச்சான்றிதழ்களுக்கு உண்மைத் தன்மை சான்று கேட்பதால் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்ஆசிரியர்கள் 10 ஆண்டு பணி முடித்தால் தேர்வுநிலை, 20 ஆண்டு முடித்தால் சிறப்பு நிலை வழங்கப்படுகின்றன

அதற்கேற்ப ஊதிய உயர்வும் அளிக்கப்படுகிறதுகடந்த காலங்களில் தொடக்கக் கல்விஆசிரியர்களுக்கு அந்தந்த வட்டார கல்வி அலுவலர்களே வழங்கி வந்தனர்சமீபத்தில் கல்வித்துறையில் செய்த நிர்வாக சீர்த்திருத்தத்தால் அந்த அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வழங்கப்பட்டது

மேலும் தேர்வுநிலை, சிறப்புநிலை கேட்டு விண்ணப்பிப்போருக்கு கல்வி சான்றுகளின் உண்மைத் தன்மை சான்று கேட்கப்படுகின்றனபணியில் சேர்ந்து 20ஆண்டுகள் கழித்து கல்விச்சான்றிதழ்களுக்கு உண்மைத் தன்மை சான்று கேட்பதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்ஆசிரியர்கள் கூறியதாவதுபணியில் சேரும்போதே கல்விச்சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்படுகிறது

இதனை பணிப்பதிவேட்டில் பதிய வேண்டும். ஆனால் அதை அதிகாரிகள் பதிவு செய்யாமல்விட்டு, விட்டு, 20 ஆண்டுகளுக்கு பின் உண்மைத் தன்மை சான்று கேட்கின்றனர்மேலும் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்வதால், தேவையில்லாத தாமதம் ஏற்படுகிறது, என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி