200 அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்ந்தும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாததால் மாணவர்கள் பாதிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2018

200 அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்ந்தும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாததால் மாணவர்கள் பாதிப்பு!


தரம் உயர்த்தப்பட்ட 200 அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்ந்தும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாத மர்மம் நீடிக்கிறது.நடப்பு ஆண்டில் 100 அரசு பள்ளிகள் மேல்நிலையாகவும், 100 பள்ளிகள் உயர்நிலையாகவும் ஆக.,7ல் தரம் உயர்த்தப்பட்டன.

மேல்நிலையில் தலா ஆறு வீதம் 600, உயர்நிலையில் தலா ஐந்து வீதம் 500 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.ஆனால் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் இதுவரை பணியிடங்கள்நிரப்பப்படவில்லை.

மேல்நிலையில் தலைமை ஆசிரியர் பணியிடமும் காலியாக உள்ளது. சமீபத்தில் நடந்த பதவி உயர்வு கலந்தாய்விற்கு பின் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பல காலியாக உள்ளன. இதனால் மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறும் மனநிலையில் உள்ளனர். இதை சரிக்கட்ட ஒரு ஆசிரியர் இரு பள்ளிகளில் (மாற்றுப் பணி) பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலர் பிரபாகரன், மாவட்ட செயலர் சரவணமுருகன் கூறுகையில்,
''ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் கவலைக்கிடமாக உள்ளன. மாற்றுப் பணியால் இரு பள்ளியிலுமே பாடம் நடத்துவது சவாலாக உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்,'' என்றனர்.

5 comments:

 1. Udanae exam vachi potta nallathan irukum.....but.??

  ReplyDelete
 2. +1,+2 மாணவகளின் நலன் கருதி 3000 க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிபணியிடங்களை PG TRB போட்டி தேர்வு மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும்

  ReplyDelete
 3. உடனடியாக posting என்பது இந்த ஆட்சி யில் கிடையாது. அடுத்த ஆட்சியில் தான்.Only announcement No Posting.இவர்களை தூக்கி எரியுங்கள்.

  ReplyDelete
 4. பணமே இல்லையாம்

  ReplyDelete
 5. இந்த ஆட்சியில் 2017 pg trb உடணடி posting

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி