அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2018

அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம்


தமிழகத்தில் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, அக்.,1 முதல் மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களாக செயல்படவுள்ளன.

கல்வித்துறையில் 1975ல் தனி இயக்குனரகமாக தேர்வுத்துறை உருவானது. சென்னை, மதுரை உட்பட 7 மண்டல அலுவலகங்கள் துணை இயக்குனர் கீழ் செயல்பட்டன.

இதன் மூலம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உட்பட 40 வகை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு முடிவு, மதிப்பெண் சான்றிதழ், மறுகூட்டல், விடைத்தாள் நகல் வழங்கல் பணிகளில் இத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு மாவட்ட அலுவலகங்கள்துவங்கப்படுகின்றன.

இதற்காக புதிதாக உதவி இயக்குனர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் நியமிக்கப்படவுள்ளனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்.,1 முதல் 32 மாவட்டங்களிலும் புதிய அலுவலகங்கள் செயல்பட சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது,' என்றார். மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஆர்.எம்.எஸ்., ரோட்டில் செயல்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், தேர்வுத்துறை அலுவலகமாக செயல்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி