இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 7,275 கிளார் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பினை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வினை இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிபிஎஸ்) 2011 முதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் வங்கி பணியில் சேருவதே தனது நோக்கமாகக்கொண்டு படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக 2019 - 2020-ஆம் ஆண்டுக்கான 7,275 கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 792 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு: 01.09.2018 தேதியின்படி 20 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோருவோருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பிரிவில் இளங்கலை பட்டம மற்றும் கணினியில் பணிபுயும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐபிபிஎஸ் நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வு முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தேர்வின் போது ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். முதல்நிலை தேர்வில் ஆங்கிலம் பிரிவில் 30 வினாக்களும், நியூமெரிக்கல் எபிலிடி மற்றும் ரீசனிங் எபிலிடியில் பிரிவில் தலா 35 வினாக்கள் என 100 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், வேலூர், புதுச்சேரி.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018 முதல் 16.12.2018 வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_Clerks_8_1.pdf என்ற வலைத்தள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2018
Vayadhu varambunu evan kondu vandhano? Loosa irupanugala? 20 vayadhula oruthan selact anaal 28 vayadhil retirement koduppengala? Apply panna mattum edhukuda age limit 28.?
ReplyDelete