மாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதிபதி நூதன தண்டனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2018

மாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதிபதி நூதன தண்டனைவந்தவாசி அருகே பள்ளி மாணவியை கிண்டல் செய்த வழக்கில், மாணவன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் சேவை செய்யவேண்டும்என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 16.3.2017ல், அதே பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன், தனது உறவினர்கள் 2 பேருடன்  சேர்ந்து, மாணவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மாணவியின் பெற்றோரை 3 பேரும் சரமாரி தாக்கி மிரட்டல் விடுத்தார்களாம்.இதுகுறித்து மாணவியின் தந்தை கீழ்கொடுங்காலூர்போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் 16 வயது மாணவன் மட்டும், திருவண்ணாமலை இளம்சிறார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை நீதிபதி விக்னேஷ் பிரபு விசாரித்து, மாணவன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டாக்டர் மற்றும் நர்ஸ்களுக்கு உதவியாக ஒரு மாதம் சேவை செய்ய வேண்டும் என நேற்று தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து நேற்று முதல் அந்த மாணவன், அரசு மருத்துவமனையில் சேவை பணியை மேற்கொண்டு வருகிறார்.

2 comments:

  1. திரும்ப வந்து அந்த பொண்ணு மேல ஆசிட் அடிப்பானுங்க, இதுக்கு எல்லாம் சட்டம் கடுமையா இருக்கணும்,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி