பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இனி அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2018

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இனி அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்''பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, வழக்கமாக, செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டு முதல், இந்த தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும். தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூலையில் தேர்வு எழுதி, அதே ஆண்டில் கல்லுாரியில் சேரலாம். அரசு பள்ளிகளை தத்தெடுக்க அனுமதி கோரி, ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.

இதற்காக, வட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்.அவர்களின் தொடர்பு எண்கள், சில தினங்களில் வெளியிடப்படும்.

அதன் பின், பள்ளியை தத்தெடுக்க விரும்புவோர், நேரடியாக அவர்களை தொடர்பு கொள்ளலாம். பள்ளிகளை தத்தெடுக்கும் பணிக்கு, 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும்.பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்ட, 14417 என்ற எண்ணுக்கு, இதுவரை, 300புகார்கள் வந்து உள்ளன. அவற்றின் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. Ithe than, ippadiye panniti iru inimel nee kanavil kooda mla va thearvu aagamata

    ReplyDelete
  2. பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறப்பு தேர்வு என்ற ஒன்று இருக்கவே கூடாது, எப்படி improvement ஒழிக்கப்பட்டதோ, அது போன்று, இதுவும் ஒழிக்கப்பட வேண்டும், இல்லையெனில் மாணவர்களிடம் படிக்கும் எண்ணம் துளி கூட வராது, படிக்க விருப்பம் இருக்கும் மாணவன் வந்தால் போதும், இல்லாதவனை வைத்துக் கொண்டு யார் துயரப்படுவது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி