தமிழக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏன் தயங்குகிறது? - kalviseithi

Sep 25, 2018

தமிழக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏன் தயங்குகிறது?“அரசு பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்தால், இன்னும் மாணவர் சேர்க்கை குறையும். அப்படி மாணவர் சேர்க்கை குறைந்தால் அதையே காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடிவிடுவது சுலபம். அதன்மூலம், பள்ளிக்கல்வியை முழுக்க முழுக்க தனியார் மயமாக்குவது எளிதாகிவிடும்”, என்கிறார் பிரின்ஸ்.

இனிமேல் அரசு பள்ளிகள் உயிர்பிழைக்க வழியே இல்லையா என்ற கேள்விதான் நம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. அரசு பள்ளிகளை காப்பாற்ற முக்கியமாக, உடனடியாக தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?
“குறிப்பிட்ட புவியியல் எல்லைக்கு இதுதான் பள்ளி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.. சிறியது, பெரியது என கிட்டத்தட்ட 80 நாடுகளில் சாத்தியமான இந்த முறை ஏன் இந்தியாவில் சாத்தியமாகாது? 1964-66ல் கோத்தாரி கமிட்டி அரசிடம் அளித்த அறிக்கையில் இந்தியாவை சேர்ந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, உலகிலுள்ள பல கல்வியாளர்களும் அளித்த பரிந்துரைகளில் இத்தகைய பொதுப்பள்ளி முறைமையும் ஒன்று. 1968-ல் உருவாக்கப்பட்ட முதல் கல்விக்கொள்கையில் பொதுப்பள்ளி முறைமையும் குறிப்பிடப்பட்டுள்ளதே”, என்கிறார் பிரின்ஸ்.
இந்தியா முழுவதும் புவியியல் எல்லைக்கு ஏற்ப அருகாமைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பொதுப்பள்ளி முறைமையை 20 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்த வேண்டும் என 1964-லேயே கோத்தாரி கல்விக்குழு இந்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அருகாமை பொதுப் பள்ளிகள் மூலமாகத்தான் மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்கி, அதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் கோத்தாரி கல்விக் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சாதாரண குடிமகனும், தன் குழந்தையை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப தேவையில்லை என நினைக்கும் அளவுக்கு, அந்த பொதுப் பள்ளிகளின் தரம் இருக்க வேண்டும் என கோத்தாரி குழு பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரையை 1968-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கல்விக்கொள்கையும் ஏற்றுக்கொண்டது. ஆனால், இன்று வரை பொதுப்பள்ளி முறைமை இந்தியாவில் சாத்தியப்படவில்லை, சாத்தியப்படுத்தப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
பொதுப்பள்ளிகளின் தேவை, முக்கியத்துவம் குறித்து இப்போதல்ல நீண்ட நெடுங்காலமாகவே இந்தியாவில் இதுகுறித்து பேசப்பட்டிருப்பதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகிறார்.
“இந்தியாவில் பொதுப்பள்ளிகளின் தந்தை என அழைக்கப்படும் ஜோதிராவ் பூலே, 1882-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கல்விக்குழுவான ஹண்டர் கமிஷன் முன்பு, அரசே பள்ளிகளை நடத்தினால்தான் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முறையான கல்வி கிடைக்கும் என பரிந்துரை செய்தார்”.
2006-ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியின்போது முத்துக்குமரன் கமிட்டி அளித்த பரிந்துரையில், “பொதுப்பள்ளிகள் தான் சமூகத்தை ஊடுருவும், சமூகத்தை மேம்படுத்தும்”, என கூறியிருக்கிறார். முத்துக்குமரன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டதை இப்போது நாம் நினைத்துகொள்ள வேண்டியது கட்டாயம்.
மாணவர்களிடையே நிலவிவந்த மெட்ரிக்குலேஷன், மாநில பாடத்திட்டம் என்ற பாகுபாட்டை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு ஒழித்து, செயல்வடிவிலான பாட முறை சமச்சீர் கல்வியால்தான் சாத்தியமானது. “சமச்சீர் கல்வி மிக எளிமையாக இருக்கிறது”, என கேலி செய்பவர்களெல்லாம் உண்டு. ஆமாம், மாணவர்களுக்கு பாடத்திட்டம் எளிதாக புரிந்துகொள்ளும்படிதானே இருக்க வேண்டும்.
இவ்வளவு பிரச்சினைகளையும் சிக்கல்களையும் வைத்துக்கொண்டு ஏன் அரசுப் பள்ளிகள் வேண்டும் என நமக்குள்ளேயே கேள்வி எழுப்பிப் பார்ப்போம். குழந்தைகளுக்கு பாலின சமத்துவம், சமூகத்தில் புரையோடிருக்கும் சாதியப் பாகுபாடு, அதிகார வர்க்கம், எதிர்கால தலைமுறையையே பாதிக்கும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தெல்லாம் ஒரு மாணவன் இளம் பருவத்திலேயே அறிந்துகொள்ள பொதுப் பள்ளிகள் தான் வேண்டும்.
பொதுப் பள்ளிகளை இனிமேலாவது உயிர்பிழைக்க வைக்க கல்வியாளர்களும், இந்த ஆய்வறிக்கையின் மூலமும் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாக செய்யல்படுத்தினாலே அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றலாம்.
கல்வித்துறைக்கென ஒதுக்கப்படும் நிதியை மடைமாற்றாமல் கல்வி வளர்ச்சிக்கே செலவிட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை கல்வி கற்பித்தல் மற்றும் அவை சார்ந்த பணிகளை மட்டுமே செய்யவிட வேண்டும். மக்கள் வசிப்பிட எல்லைகளையும், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட எளிதில் அணுக இயலாத இடங்களில் புவியியல் எல்லைகளுக்குட்பட்டே பொதுப்பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒரு தனியார் பள்ளி குறிப்பிட்ட இடத்தில் அமைகிறது என்றால், அதற்காக பள்ளியைத் தொடங்கும் தனியார் அமைப்பு என்ன காரணங்களைச் சொல்கிறதோ அதை ஆராய்ந்து அருகாமையில் உள்ள பொதுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.
மாணவனின் வசிப்பிடத்திற்கு 5 கி.மீ. தொலைவை தாண்டி அமைந்திருக்கும் தனியார் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்வது. அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மக்களின் வரி மூலம் ஊதியம் பெறும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும் என சட்டம் இயற்றல்.
பொதுப் பள்ளிகளை தூக்கி நிறுத்த இனிமேலாவது அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என முத்தரப்பு மக்களும் முன்வர வேண்டும். “அரசுப் பள்ளிகளில் தரம் இல்லை”, “சரியான கல்வி கிடைக்காது” என எண்ணும் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.
கும்பகோணத்தில் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் தீயில் எரிந்த 94 பிஞ்சுக் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கவில்லை.சென்னையில் முறையான பயிற்சியின்றி நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவி படித்தது நகரின் 'மிக முக்கியமான' தனியார் பள்ளியில். “அரசுப் பள்ளியில் படித்ததால்தான் அனிதா நீட் தேர்வில் தோற்றாள்” என நம்புபவர்களுக்கு ஒன்று, அனிதா படித்தது அரசுப் பள்ளியில் அல்ல. ஆனால், இங்கே அனிதா படித்தது அரசுப் பள்ளியா? தனியார் பள்ளியா? என்பது வாதமல்ல. நீட் தேர்வின் கொடுமைகளை, அதுவொரு சமூக அநீதி என மாணவர்கள் புரிந்துக்கொள்ள பொதுப் பள்ளிகள் ஒன்றே தீர்வாக இருக்க முடியும்.

29 comments:

 1. உயர் கல்வியில் அரியர் வைக்கிறார்களே அதற்கு என்ன காரனம்

  ReplyDelete
 2. +1,+2, மாணவர்களின் நலன் கருதி உடனடியாக 3000 மேற்பட்ட முதுகலை ஆசிரியர் ஆசிரியர் காலி பணியிடங்களை PG TRB போட்டி தேர்வு மூலம் உடனடியாக நிரப்ப இந்த அரசு முன் வர வேண்டும்

  ReplyDelete
 3. Govt school padithal arasu velai tharuvom and free high education and private institute 50% priority and total school converted to English medium each school transport facility maintenance by private and fee collection from parents just for transport fees only ippiti gov panna nitchiyam manavargal increase agum

  ReplyDelete
 4. some govt school pg vacancy is there. how to learn students properly. so first step do fill the vacancy.

  ReplyDelete
  Replies
  1. katthi energya waste pannathinga... ipa edhum illa... next govt than appoint pannum...

   Delete
 5. Anaithu thaniyar pallikalaium arasudaimai aakka vendum.

  ReplyDelete
 6. Anaithu thaniyar pallikalaium arasudaimai aakka vendum.

  ReplyDelete
  Replies
  1. mudhal potavan oruthavan... muzhusa lavattitu poravan innoruthavana? never

   Delete
 7. I was joined MA on 2009 never write exam.(2010&2011B Ed complete) 2011&2012 write 1st&2nd year together completed.I can eligible for pg trb written exam? If eligible you have any judgment copy pls forward to my mail id

  ReplyDelete
  Replies
  1. not eligible ... academic year idikum boss

   Delete
  2. இது போன்ற தொலைநிலைக் கல்வி மூலம் அதிகமான மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர், ஒரே வருடத்தில் இரண்டு டிகிரி படிப்புகளை படிக்க கூடாது, இது நீங்கள் தொலைநிலை கல்வி சேரும்பொழுது கூட கேட்கப்படும், மீறி நீங்கள் சேருவது உங்களுக்கு நீங்களே தோண்டிய குழி, நீங்கள் படித்த முதுகலை படிப்பு தகுதி அற்ற படிப்பு, காலம் தாழ்த்தாமல் மீண்டும் புதிய முதுகலை படிப்பில் சேர்ந்து படித்து முடியுங்கள், நீங்கள் PG TRBக்கு தகுதி இல்லாதவர், சில மூடர்களின் பேச்சை கேட்டு நிறைய மாணவர்கள் குறுக்கு வழியில் இரண்டு டிகிரி படித்து ஏமாறுகின்றனர், இது நமது தவறு,

   Delete
  3. ஐயா எனக்கு ஒரு சந்தே கம். நான் எம். எட் ம் (2018-2020) பி.எச்.டி ம்(2019-2022) இப்படி ரெ குலர்ல படிக்கலாமா இல்ல ஏதாவது பிரச்சனை வருமா? தயவு செய்து தெ ளிவு படுத்தவும்.

   Delete

 8. https://chat.whatsapp.com/4fG6ExH9uqRDdTpEzRHSbK

  Pg 3rd list 2017 patri therinthavargal melkanda Watts app group la inaiyalam....aanal 3 rd list varuvathu nadakkuma endru theriyavillai.....but light pechi irukku.....ithai thelivu padutha & pesikkolla intha link.

  ReplyDelete
 9. special teacher cv atten panni irukura velaya vittathu than micham.sapatuku ching chan

  ReplyDelete
 10. Nitchiyam oru nal private school close panna arppatam varum

  ReplyDelete
 11. U r not eligible because ur academic yr 2009-2010
  U left course mn and date year 2012

  ReplyDelete
 12. Nitchiyam oru nal private school close panna arppatam varum

  ReplyDelete
 13. 2009ல் முது கலை பட்டப்படிப்பிற்கு சேர்ந்தேன்.இடையில் B.Ed 2010-2011ல் முடித்தேன்.2011-2012ல் இரண்டு வருட பரிட்சை எழுதி முடித்தேன்.T R B தேர்வு எழுத நான் தகுதி உடையவரா

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் தகு‌தி உடையவர் தான்

   Delete
  2. எப்படி தகு‌தி உடையவர் - 2009-2011 முது கலை பட்டப்படிப்பிற்கு இடையில் B.Ed 2010-2011 நீங்கள் படித்த முதுகலை படிப்பு தகுதி அற்ற படிப்பு, காலம் தாழ்த்தாமல் மீண்டும் புதிய முதுகலை படிப்பில் சேர்ந்து படித்து முடியுங்கள், நீங்கள் PG TRBக்கு தகுதி இல்லாதவர்,

   Delete
 14. *🎖🎖🎖🛡🛡🛡🛡💐💐💐*PG-TRB ENGLISH*
  *Questions banks are available*... 📚📚📚📚📚📚📚📚📚📚
  1.Ten units
  2.More than 5000 objective questions.
  3.Unit wise questions banks
  4.Valuable materials in chief cost
  5. 360 pages @ (Rs.800 +courier charge)
  For contact📱📱📱 8940617482📱📱📱

  ReplyDelete
 15. GOVERNMENT AIDED SCHOOL VACANCIE FOR PERMANENT POST
  💐BT பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
  🦋 TAMIL BC and Mbc
  🌸SCAorSC- SCIENCE


  CANDIDATE MALE&FEMALE
  🌸PG- BC Nadar- MSc Chemistry

  🌹 MBC- HISTORY
  MALE&FEMALE
  🌺 BE civil for MNC
  💐Dted - Bc and Mbc heavy Amount payable candidates

  💐music teacher and Drawing teacher immediately wanted

  🌷SCA-and BC PET உடற்கல்வி
  MALE&FEMALE
  Immediately contact +917538812269

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி