ஆசிரியர்களிடம் குறைகள் இருப்பதை பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Sep 22, 2018

ஆசிரியர்களிடம் குறைகள் இருப்பதை பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்


தமிழக பள்ளிகளில் இனி ஆசிரியர் இல்லை என்ற நிலை இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்கள் பற்றைக்குறை நீங்கிவிடும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு விரைவில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்களை பொருத்தவரையில் மாணவர்களின் எதிர்கால நலனை கொண்டு செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக் கட்டமைப்பை பாதுகாக்கவும், மாணவர்களை வழிநடத்தவும் பெற்றோர், ஆசிரியர் அமைப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர்களிடம் குறைகள் இருக்குமானால் பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

8 comments:

 1. Mr minister engal ina thin meethu kutrathai kandupidithu thandippathai pol ungalukku vote potu therntheduthu minister agi vitta neengal ungal meethu 1008 kuraigal irukku athai epdi thandippathu athaiyum sollieunga mr minister

  ReplyDelete
 2. மாணவர்களை அடித்தாலும் தண்டனை
  இப்போது பெற்றோர் வந்து குறைசொன்னாலும் தண்டனை இந்த
  இந்த பதவி உங்களுக்கு தேவையா
  Ministersir

  ReplyDelete
 3. உங்கள் மீது மட்டும் தான் குறைகள் உள்ளது அதை யாரிடம் சொல்வது

  ReplyDelete
  Replies
  1. Ennatha nadakuthu.teacher oru human being tha.student Mela thappu erutga apo student Ku punished illa.teacher Ku .gvt sari illa

   Delete
 4. உங்களது என்ன பண்றது, தேர்தல் வந்தால் தெரியும் உங்கள் அராஜக ஆட்டம்

  ReplyDelete
 5. கவலைப்பட வேண்டாம் பெரும்பாலும் தனியார் பள்ளியில் சேர்ப்பார்களே தவிர குறை சொல்லமாட்டார்கள் cctv வைத்தால் போதும்

  ReplyDelete
 6. முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிற மாதிரி தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிடுவதை மறைத்து பேசுவது என்ன நியாயம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி