தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணிக்கான அரசாணை வெளியீடு - ஆசிரியர்கள் பணி நியமனம் விரைவில் தொடக்கம் - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Sep 22, 2018

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணிக்கான அரசாணை வெளியீடு - ஆசிரியர்கள் பணி நியமனம் விரைவில் தொடக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்திட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை மாலை வந்தார். அவரை கோயில் இணை ஆணையர் பா.பாரதி மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர்.முன்னதாக, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது. கல்வித் துறையில் உருவாக்கப்படும் மாற்றங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப் பணியிடமே இல்லாத நிலையை உருவாக்க பெற்றோர்- ஆசிரியர்கள் சங்கம் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக அரசாணை கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை மாவட்டத்தோறும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதனை முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்படுத்துவார்கள்.

தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்களை பொருத்தவரையில் மாணவர்களின் எதிர்கால நலனை கொண்டு செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பள்ளிக் கட்டமைப்பை பாதுகாக்கவும், மாணவர்களை வழிநடத்தவும் பெற்றோர்- ஆசிரியர் அமைப்பு உள்ளது. ஒருவேளை ஆசிரியர்களிடம் குறைகள் இருக்குமானால் பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

26 comments:

 1. appo posting yarukum illa..adhan unmai

  ReplyDelete
 2. Kalvikku minister ah irunthutu oru visayatha kooda theliva solla mattikirir enna kodumai ithu

  ReplyDelete
 3. தற்காலாக ஆசிரியர் நியமனம் 3 மாதத்திற்கு மட்டுமே இந்த அரசு உடனடியாக +1, +2 மாணவர்களின் நலன் கருதி 3000 முதுகலை ஆசிரியர் காலிபணியிடங்களை PG TRB போட்டி தேர்வு மூலம் நிரந்தர ஆசிரியர்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

  ReplyDelete
 4. Pg trb chemistry 2017 cased list enna achiii....eppo varum...????

  ReplyDelete
 5. TET,TRB எல்லாம் அடுத்த ஆட்சியில் நடைபெறும் அதுவரை இப்படித்தான்....

  ReplyDelete
 6. Unmaiya December I'll pg trb varuma pl tell me

  ReplyDelete
 7. We r educator's don't use bad words my request friends

  ReplyDelete
 8. சோத்துல உப்பு போட்டு தின்னுற மனுஷ ஜாதி பயலுங்க எவனும் அந்த தற்காலிக பணிக்கு போகாதிங்க, அவங்க ஒழுங்கா போஸ்டிங் போடட்டும், எக்ஸாம் வைக்கட்டும், நிரந்தர பணி வேண்டும், தற்காலிகமா 7000 ரூபாய் எதுக்கு வாங்கணும், தனியார்லையே நாம மாசம் 30000க்கு மேல சம்பாதிக்கலாமே, வேலைல ஒரு பாதுகாப்பு வேணுன்னு தான் நாம அரசாங்க ஆசிரியர் வேலை கேக்குறோம், அது தற்காலிகமா போட்டா என்னா அர்த்தம்.

  ReplyDelete
  Replies
  1. தர்காலிக அமைச்சர் போடுங்கள். ஆசிரியர் மட்டும் என்ன......
   அரசியல் வாதிகள் மட்டும் நிரந்திரமா.தர்காலிக அமைச்சர் வேண்டும்.

   Delete
 9. இவன் கோயிலுக்கு போனாலும் ஆசிரியர் பிரச்சினை பற்றி ஏன் பேசுகிறான். உளறு வாய்.... .

  ReplyDelete
 10. Intha Minister naya innum kevalama thittalam..

  ReplyDelete
 11. Idhvara porutu pathutan idhuku mela mariyadha kidayadhu indha Kalvituraikum, venune case podra domar pasangalukum. eanna ninachitu iruakaunga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி