பிளாஸ்டிக் கோப்புகள் பயன்பாட்டிற்கு தடை - kalviseithi

Sep 28, 2018

பிளாஸ்டிக் கோப்புகள் பயன்பாட்டிற்கு தடை


தலைமை செயலகத்தில், பிளாஸ்டிக் கோப்புகள் பயன்பாட்டுக்கு, தமிழக அரசு, தடை விதித்துள்ளது.

தமிழகத்தில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை, ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது.இந்த ஆணையை அமல்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை கவனிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இக்குழுவினர், பல்வேறு துறைகளிடமிருந்தும்,பிளாஸ்டிக் தடைக்கான ஆலோசனைகளை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், அரசு அலுவலகங்களில், அட்டைகோப்புகள் பிரதானமாக இருந்தாலும், பல நேரங்களில், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், பிளாஸ்டிக் கோப்புகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என, வனத்துறை அதிகாரிகள், அரசுக்கு ஆலோசனை தெரிவித்து இருந்தனர். சமீபத்தில், தலைமை செயலர் தலைமையில் நடந்த, அனைத்து துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில், இக்கருத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, முதற்கட்டமாக, தலைமை செயலகத்தில் உள்ள துறை அலுவலகங்களில், பிளாஸ்டிக் கோப்புகளை பயன்படுத்த, அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக, அட்டையால் தயாரிக்கப்படும் கோப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, அனைத்து துறை, தலைமைஅதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி