பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு - kalviseithi

Sep 28, 2018

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு


பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மாணவர்களிடம்விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, முதல் கட்டமாக, 320 பள்ளிகளுக்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கையேட்டை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் வழங்கினார்.

இதுகுறித்து, தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, தனியார் பங்களிப்போடு, அரசு பள்ளிகளில், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். முதல் கட்டமாக, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளி மாணவர்களுக்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கையேடு வழங்கப்பட உள்ளது.

கையேட்டில், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமை,அதை ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தவிபரங்கள் இடம் பெற்றுள்ளன. இப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மற்ற பள்ளிகளுக்கு பயிற்சி அளிப்பர்.'ஜன., 1 முதல், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது' என, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அனைத்து பள்ளிகளிலும், ஜனவரிக்குள், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.தனியார் பள்ளிகளிலும், பிளாஸ்டிக்ஒழிப்பு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கடிதம் எழுதி உள்ளார். அதேபோல, 6 மற்றும், 9ம் வகுப்புகளுக்கு, புதிதாக வழங்க உள்ள, மூன்றாம் பருவ புத்தகத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பாடத்திட்டம் இணைக்கப்பட உள்ளது.

இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி