ஆசிரியர் தினத்தை சிறப்பித்த கூகுள் டுடூல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2018

ஆசிரியர் தினத்தை சிறப்பித்த கூகுள் டுடூல்!தேசிய நல்லாசிரியர் தினத்தை முன்னிட்டு கூகுள்நிறுவனம் டுடூல் மூலம் சிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் 1888-ம் ஆண்டு செப்.5-ம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய நல்லாசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தில் பள்ளிகளில் சிறப்பாக பணி புரியும் ஆசிரியர்கள்தேர்வு செய்யப்பட்டு ஆண்டு தோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுவழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். கூகுள் நிறுவனம் தன்னுடைய டுடூல் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் அன்றைய சிறப்பை குறிக்கும் வகையில் டுடூலை வடிவமைப்பது வழக்கம் .அதுபோல் இன்றயை ஆசிரியர் தினத்தையும் தனது டுடூல் மூலம் ஆசிரியர் தினத்தை கவுரவித்துள்ளது.

 இந்தியாவில் ஆசிரியர் தினம் செப்.,5-ம் தேதி கொண்டாடப்படுவதை போல் உலக ஆசிரியர் தினம் அக்டோபர் மாதம் 5-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி