கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, விடுமுறையில் சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியர் முடிவெடுக்க அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2018

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, விடுமுறையில் சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியர் முடிவெடுக்க அனுமதி


காலாண்டு தேர்வு விடுமுறையில், சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து,அந்தந்த அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில், 'ஸ்பீடு' நிறுவனம் மூலம், ஆன்லைன், 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஏற்கனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். அதேநேரம், பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் மாற்றம் உள்ளிட்டவைகளால், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்த, பல தலைமையாசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் நடத்தக்கூடாது என, மெட்ரிக் பள்ளி இயக்குனர் உத்தரவிட்டதால் குழப்பம் நீடித்தது.

இந்நிலையில், சேலம் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் கணேஷ்மூர்த்தி அனுப்பிய சுற்றறிக்கையில், 'விடுமுறையில், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, உரிய வழிகாட்டுதல்படி, சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. சேலம் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் கணேஷ்மூர்த்தி அனுப்பிய சுற்றறிக்கையில், 'விடுமுறையில், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, உரிய வழிகாட்டுதல்படி, சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல்லுக்கு ஒன்று உங்களுக்கு ஒன்று வாழ்க நீங்கள். திண்டுக்கல்மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் ஐயா அனுப்பிய சுற்றறிக்கை சூப்பர்

    ReplyDelete
  2. படிக்கிறவன் எப்படியும் படிப்பான் படித்தவனுக்கு வேலை இல்லை என் மதிப்பெண் 950 ஆனால் எனக்கு வேலை இல்லை Mcom பிஎட் mphil Blit , MA(TAMIL) நெட் முடித்துள்ளேன் எல்லாமே அரசுப்பள்ளி ஐயா உங்க கரிசனம் தெரியுது கணேஷ் ஐயா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி