நிலவில் சாய் பாபா முகம் : உண்மையா? வதந்தியா? - kalviseithi

Sep 24, 2018

நிலவில் சாய் பாபா முகம் : உண்மையா? வதந்தியா?நிலவில் ஷீரடி சாய்பாபாவின் உருவம் தெரிகிறது என்று நேற்று பரவிய வதந்தி சென்னை வாசிகளை வீதிகளில் இறக்கி நிலவைப் பார்க்க வைத்துள்ளது.

உண்மையில், பாபாவின் உருவம் நிலவில் தெரிந்ததா என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.எவ்வளவோ தனித்த இரவுகளை கடந்து வந்தாலும் நேற்றைய இரவு சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. நிலவில் பாபாவும் உருவம் தெரிந்ததாக வாட்ஸ் அப்பில் பரவிய தகவலே அதற்கு காரணம். அதற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில், ஒரு புகைப்படம் ஒன்றும் நேற்று வாட்ஸ் அப்பில் உலவியது. அதில், நிலவில் பாபாவின் முகம் தெளிவாக படிந்திருப்பது போல் காணப்பட்டதால், பாபாவின் முகத்தைப் நிலவில் பார்க்க பொதுமக்கள் திடீரென வீதியில் திரண்டனர். தாங்கள் பாபாவின் முகத்தை நிலவில் பார்த்ததாக சிலர் கூறி பரபரப்பை மேலும் அதிகரித்தனர்.

இருப்பினும், இது வதந்தி என்று கூறிய சிலர், பாபாவின் உருவம் நிலவில் தெரிவதாக நாம் மனத்தில் நினைத்துக்கொண்டு பார்ப்பதாலேயே அது போன்ற காட்சி கண்ணுக்குப் புலப்படுவதாக கூறினர். மேலும், தங்களுக்கு பிடித்த கடவுளை மனத்தில் நினைத்துக்கொண்டு பார்த்தாலும் அவர்களின் உருவம் நிலவில் இருப்பது போல் தெரியும் என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வீடியோ காட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு இதே போல் வெளியாகி, பரபரப்பு கிளம்பியது. இது நாசா எடுத்த படம் என்றும் தகவல்கள் வெளியானது. இருப்பினும், அதுகுறித்து இன்னும் நாசா உறுதிப்படுத்தவில்லை. அந்த உருவம் என்ன, யார் அது என்பது குறித்தும் இன்னும் நாசா தெளிவுபடுத்தவில்லை.இதே போல், கடந்த காலங்களில், நிலவில் ஏலியனின் மண்டையோடுபோன்ற காட்சி தெரிவதாக சர்ச்சைக் கிளம்பியது. இதனால், வேற்று கிரகவாசியான ஏலியன் நிலவில் இருந்ததாகவும், பின்னர் அவை அழிந்ததால், அவற்றின் எலும்புகள் நிலவில் கிடப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், ஏலியன் நிலவில் வாழ்ந்ததை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.1976 ஆம் ஆண்டு, வெளியான ஒரு புகைப்படம் இதே போல் சர்ச்சைக்கு வித்திட்டது. ஏலியன் புகைப்படம் ஒன்று நிலவில் படிந்ததாக வெளியேன புகைப்படமே அது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட நாசா. அது பொய்யான புகைப்படம் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

2005 ஆம் ஆண்டு அமெரிக்காவை மட்டும் அல்ல உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்தது அந்த புகைப்படம். நிலவில் உள்ள பாறை ஒன்றில், அப்போதையை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முகம் தெரிவதாக சித்தரித்து இணையதளத்தில் கசிந்தது ஒரு புகைப்படம். அந்த செய்தியைக் கேட்டு, பராக்ஒபாமாவே அதிர்ச்சியில் ஆடிப்போனார்.

 ஒபாமாவின் சிலை ஒன்றிலிருந்து அந்த புகைப்படம் எடுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.நிலவில் பாட்டி வடை சுடுகிறாள் என்று குழந்தைகளுக்கு கதை சொல்லியதில் இருந்து நீல் ஆம்ஸ்டாங் நிலவில் கால் பதித்தது வரை நிலவில் மனிதன் என்ற சர்ச்சை பல்வேறு காலங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. உண்மையோ பிரம்மையோ சமூக ஊடகங்களில் பரவும் காட்சிகளால் வதந்திகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

Source: NEWS 7

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி