இணைய ஆபத்தை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு உதவும் புதிய, 'ஆப்' - kalviseithi

Sep 24, 2018

இணைய ஆபத்தை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு உதவும் புதிய, 'ஆப்'


'புளுவேல், மோமோ சேலஞ்ச்' உள்ளிட்ட இணைய விளையாட்டுகளால் எழும் ஆபத்துகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில், புதிய விளையாட்டு, 'ஆப்'பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

'புளுவேல், மோமோ சேலஞ்ச்' உள்ளிட்ட பல இணைய விளையாட்டுகளால், கடந்த சில ஆண்டுகளில், பலர் உயிரிழந்தது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த ஆபத்துகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க, 'சைபர் டிரைவியா' என்ற, விளையாட்டு, 'ஆப்' எனப்படும் செயலியை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது.இதுகுறித்து, என்.சி.பி.சி.ஆர்., எனப்படும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சைபர் டிரைவியா எனப்படும், 'ஆப்'பில், பல விடைகளுடன் கூடிய கேள்வி தொகுப்புகள் இருக்கும். சரியான விடை கூறும் குழந்தைகளுக்கு, பரிசு புள்ளிகள் வழங்கப்படும்.

இணையத்தில் அறிமுகம் இல்லாத ஒருவர் தொடர்பு கொள்ளும்போது, அவர்களை எவ் வாறு எதிர்கொள்வது என்பதுகுறித்த கேள்விகள், சைபர் டிரைவியா, 'ஆப்'பில் இடம்பெற்றிருக்கும்.அறிமுகம் இல்லாத நபர், குழந்தைகளிடம், புகைப்படம் கேட்டாலோ, விரும்பத்தகாத செயல்களை செய்யும்படி கூறினாலோ, அவர்களை எதிர்கொள்வது குறித்த தகவல்கள், சைபர் டிரைவியா மூலம், குழந்தைகளுக்கு போதிக்கப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி