ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை - kalviseithi

Sep 25, 2018

ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை


ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு அருகே பெரியசேமூர் ஈபிபி. நகரில் புதிதாகரூ.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாலித்தீன் பயன்படுத்துவதில்லை என்ற சூளுரை மூலமாக இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்கும். சிறப்பாக பணியாற்றாத பெற்றோர்ஆசிரியர் கழகங்களை உடனடியாக மாற்றி விட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் கொள்கை முடிவுப்படி எந்த பள்ளியையும் மற்றொரு பள்ளிக்கு மாற்ற எந்த பரிசீலனையும் கிடையாது. போராட்டம் நடத்துவோம் என்று கூறுகிறவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆலோசனை கூறலாம். அங்கன்வாடியில் இருக்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் இணைக்கும் நோக்கம் கிடையாது.

தமிழகத்தை பொறுத்தரை 3 லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒரு சில ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போலீசார் மூலமாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

12 comments:

 1. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 2. https://chat.whatsapp.com/4fG6ExH9uqRDdTpEzRHSbK

  Pg 3rd list 2017 patri therinthavargal melkanda Watts app group la inaiyalam....aanal 3 rd list varuvathu nadakkuma endru theriyavillai.....but light pechi irukku.....ithai thelivu padutha & pesikkolla intha link...

  ReplyDelete
 3. sengottaiya today press meet illaya

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. Appo posting potamatinga peti thaan kudupinga enna sir eppadi pantringaley sir what abote pg trb exam

  ReplyDelete
 6. Athuvum ஓகிப் புயலில காணாம போயிடுச்சாம்

  ReplyDelete
 7. இதுவரைக்கும் எத்தன பாலியல் தொல்லை குடுத்த வாத்தியார் மேல நடவடிக்கை எடுத்துருக்கிங்க, அப்படி தப்பு பண்ணவன டிஸ்மிஸ் கூட பண்ணது இல்ல, சிம்பிளா வேற ஊருக்கு தான் மாத்திருக்கிங்க, ஆனா ஒரு பையன படிக்கலன்னு அடிக்கிற வாத்தியாரு மேல உடனே கேஸ் போட்டுறுவிங்க,

  ReplyDelete
  Replies
  1. Yen ivangalalam maathanum job ilanu velila anupidanum.bcz ivangalam teacher ye ilaye.educationku oru periya mariyathai iruku. Adha intha maari sola perala mariyathaya kurachukavendamey

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி