UGTRB - ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று இரண்டாவது தேர்வையும் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - சிறப்பு கட்டுரை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2018

UGTRB - ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று இரண்டாவது தேர்வையும் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - சிறப்பு கட்டுரை!


மத்திய அரசு, தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்து விட்டு இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கவிருப்பதும், ஆசிரியர் தகுதித் தேர்வையடுத்து தமிழக அரசு புதிய போட்டித் தேர்வை அறிவித்திருப்பதும் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் மட்டுமல்லாது கல்வியாளர்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.

 சுய சிந்தனையை வளர்ப்பதே உயர்கல்வியின் நோக்கம் என்ற கொள்கையோடு உருவாக்கப்பட்டது பல்கலைக்கழகக் கல்வி வாரியம். இதற்குக் காரணமானவர் தத்துவப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். அவர் தலைமையில் 1948-இல் உருவாக்கப்பட்டது இது.
 "அனைவருக்கும் தரமான உயர்கல்வி' என்ற இலக்கோடு 1956-இல் உருவான பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சட்டபூர்வ அமைப்பு. மாணவர் கல்வி உதவித் தொகை திட்டத்தை முன் வைத்த சி.டி. தேஷ்முக் மற்றும் மகளிர் பல்கலைக்கழகங்களை நிறுவ திட்டங்கள் தீட்டிய மாதுரிஷா ஆகிய இருவரும் ஒரு ரூபாய் மாத ஊதியத்துக்கு இதன் தலைவர்களாகப் பணியாற்றினர். இவ்வாறு கல்வியாளர்களாலும், தொலைநோக்குப் பார்வையாளர்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு கல்விக் கழகம் இப்போது கலைக்கவிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
 இப்போது இருக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பு வரவிருக்கிறது. இதனால் பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தொடர்பே இல்லாதவர்கள், இனி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் திட்டத்தை மதிப்பிட்டு மானியம் வழங்கலாம்.
 உயர்கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கவிருக்கும் இந்த நடவடிக்கையின் முன்னோட்டம் 2018 ஜூன் 28 அன்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ஆங்கில மொழியில் மட்டும் வெளியிடப்பட்டது. வேறு எந்த இந்திய மொழியிலும் வெளியிடப்படவில்லை.
 கருத்து கேட்கும் முன்வரைவாகவே அது முன்வைக்கப்பட்டாலும் குறுகிய கால அவகாசமே கருத்து கேட்புக்குத் தரப்பட்டது. அதிலும் மசோதா என்பதற்குப் பதிலாக சட்டம் என்ற பதத்துடன் "இந்திய உயர்கல்வி ஆணையம் சட்டம் 2018' முன் வரைவாக அறிவிக்கப்பட்டது.
 ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும். அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் சட்டமாக மாறும். அதுவரை அது வரைவு மசோதா என்றே அழைக்கப்படும். ஆனால் இந்த ஆவணம் "முன் வரைவுச் சட்டம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.
 கல்வி என்பது மத்தியப் பட்டியலிலும், மாநிலப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதால் இந்த வரைவு மசோதா மாநில உரிமையை மீறும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானதாகும் என்று மாநிலங்கள் எதிர்க்கின்றன.

அத்துடன் இந்த வரைவு மசோதா பிரிவு 3 துணைப்பிரிவு (6)-இன்படி உயர்கல்வி ஆணையத்தின் தலைவர் பதவிக்கு வெளிநாட்டு குடிமக்களில் ஒருவரை நியமிப்பதற்கு வழி செய்கிறது.
 "பல்கலைக்கழக மானியக் குழு' என்னும் அறுபதாண்டு கால சட்டபூர்வ அமைப்பு, அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கும் போதுமான நிதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் கல்வி ஒரு சமூகப் பொருளாக உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பைக் கலைப்பதற்கு இவ்வளவு அவசரம் ஏன்?
 முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் பல்கலைக்கழக மானியக் குழுவை ஒழித்துக்கட்ட திட்டமிட்டிருந்தது. அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல், யுஜிசி செயல்படா அமைப்பாக உள்ளது என்றும் மாற்று அமைப்பை உருவாக்குவது பற்றியும் பேசியுள்ளார்.
 யுஜிசி செயல்படா அமைப்பாக இருப்பதற்கு யார் காரணம்? அதனை செயல்பட வைக்கும் பொறுப்பு அரசுக்கு இல்லையா? இந்தக் கேள்விகள் பரவலாக எழுந்ததும் அப்போதைய அரசு அடங்கிப் போனது.
 தமிழக அரசின் கல்வித்துறை, நீண்ட காலத்திற்குப் பிறகு பெரும் மாறுதல்களைச் செய்து மக்கள் மத்தியிலும், மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியிலும் புதிய நம்பிக்கைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
 பள்ளி ஆசிரியர் நியமனத்துக்குத் தகுதித் தேர்வு வந்தபோதே அதைக் கல்வியாளர்களும், ஆசிரியர் இயக்கங்களும் எதிர்த்தனர். பள்ளி, கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு ஆசிரியர் பணிக்கான பயிற்சியும், பட்டயமும் பெற்ற நிலையில், இந்தத் தேர்வு தேவைதானா என்ற கேள்வி எழுந்தது.
 இந்நிலையில், இப்போது தமிழக அரசின் ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று இரண்டாவது தேர்வையும் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல இருக்கிறது.
 தமிழ்நாட்டில் ஆசிரியப் பயிற்சிப் பட்டம் பெற்றவர்களும், கல்வித் துறையில் பட்டம் பெற்றவர்களும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அந்த வரிசையின் அடிப்படையில் பணி இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதே இதுவரை இருந்து வந்த நடைமுறை.
 இந்த நிலை மாற்றப்பட்டு அவ்வப்போது உருவாகும் காலிப் பணியிடங்களுக்கு நேரடியாகவே போட்டித் தேர்வை நடத்தி, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அந்தத் தகுதித் தேர்வும் போதாமல், இன்னொரு தேர்வும் நடத்தப் போவதாகத் தமிழக அரசு கூறுவது ஏன்?
 வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்றும், அப்படி கிடைப்பவர்கள் காலம் கடந்து வேலைக்கு வருவதால் படித்ததை மறந்து விட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.
 இப்போது படிப்பை முடித்துவிட்டு வருபவர்கள் உடனடியாகத் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கும்போது அவர்களுக்குப் பாடங்கள் மறந்து போகவும் வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வு என்று இரண்டு தேர்வுகள் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க வேண்டிய அரசுகள் தங்கள் கடமைகளில் இருந்து நழுவுகின்றன. இது மாணவரிடம் அவநம்பிக்கையையும், ஊழலையும் வளர்க்கவே உதவும். ஆசிரியர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்திட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு, உரிய காலத்தில் நடத்தாமல் தள்ளிப் போய்க் கொண்டே யிருக்கிறது. கடந்த முறை நடந்த தகுதித் தேர்வு பற்றிய ஊழல் புகாரும் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 200 பேருக்கு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 7 லட்சத்து 53 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதினர். அவர்களில் 34,979 பேர் தேர்ச்சி பெற்றனர்.
 அத்தேர்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அரசுப் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், மதிப்பெண்ணில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அத்தேர்வை ரத்து செய்தது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள்களை "ஸ்கேன்' செய்த அதே நிறுவனம்தான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித் தேர்வு விடைத்தாள்களையும் "ஸ்கேன்' செய்திருந்தது. விரிவுரையாளர் தேர்வைப் போலவே தகுதித் தேர்விலும் மதிப்பெண் குளறுபடி செய்யப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
 இந்தப் புகார்களைத் தொடர்ந்து, புதிய நிறுவனத்தின் மூலம் தகுதித் தேர்வு விடைத்தாள்கள் "ஸ்கேன்' செய்யப்பட்டன. அப்போது சுமார் 200 பேருக்கு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டு தேர்ச்சி பெறச் செய்திருப்பது தெரிய வந்தது.
 அந்த 200 பேரின் விடைத்தாள்களுக்குப் பதிலாக சரியான விடை எழுதப்பட்ட வேறு விடைத் தாள்களை கணினியில் உள்ளீடு செய்து அதிக மதிப்பெண் வழங்கப்பட்டதை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்த 200 தேர்வர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டதுடன் அவர்கள் இதர தேர்வுகளை எழுதவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தடைவிதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் ஊழல் நடப்பது இது முதன்முறையல்ல. காலம் அவற்றை மறந்து விடுகிறது. அரசுத் துறைகளும் அவற்றை மறைத்து விடுகின்றன. ஆனால் ஊழல் மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
 பெயரளவுக்கு "தகுதி தேர்வு' என்றும், "போட்டித் தேர்வு' என்றும் கூறப்படுகிறதே தவிர, உண்மையானவர்களுக்குச் சென்று சேரவில்லை. பணம் படைத்தவர்கள் பாதியில் தட்டிப் பறித்துக் கொள்ள வழிவகுக்கிறது. இது அரசுக்கும், தொடர்புடைய துறைகளுக்கும் தெரியாதா? நன்கு தெரியும். தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
 மாற்றங்கள் மட்டுமே மாறாதவை என்பது இயற்கை விதி. அந்த மாற்றங்கள் ஏற்றங்களுக்குத் துணைபோக வேண்டுமே தவிர ஏமாற்றங்களுக்குத் துணை போகக் கூடாது.

நன்றி
தினமணி

22 comments:

 1. Athulaum elarum pass pana enna panuviga 3rd exam vaipigalada loosugala

  ReplyDelete
 2. Potti thervu is correct method

  ReplyDelete
  Replies
  1. தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை பின்னர் எப்படி போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாங்குவீங்கள் பணம் கொடுத்து குறுக்கு வழிகள் மூலமாகவா

   Delete
 3. Replies
  1. போட்டி தேர்வை ஆதரிக்கும் அனைவரும் படித்து விட்டு பணி வாங்கணும் எண்ணம் இல்லை. எப்படியாவது குறுக்கு வழியாக பணத்துக்கு அலையும் அரசியல் நாய்களிடம் பணத்தை கொடுத்து பணி வாங்க நினைப்பது சரியா.

   Delete
  2. ஏற்க்கனவே பாலிடெக்னிக் மற்றும் தகுதி தேர்வில் பணம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற்ற திருட்டு நாய்களை பார்த்து விட்டுமா போட்டி தேர்வை ஆதரித்து பேசுறீங்க அப்போ உங்களை என்ன சொல்வது

   Delete
  3. Thiruttu naigalai jailil adaikka vendum athai vittu potti thervu vedam enttu solvathil artham illai.yar vetti pettal enna appo tevil vetti pettu asiriyar pani purigiravar ellam kurukku vazhiyil vanthavargala.pathil sol

   Delete
  4. இந்த அமைச்சர் பதவி ஏற்ற நாளில் இருந்து நடந்த அனைத்து தேர்வுகளும் அப்படி தானே நடந்து வருகிறது. ஏற்க்கனவே போனவர்களை பற்றி பேசவில்லை இப்போது போக முயற்சிக்கும் தகுதி இல்லாதவர்களை பற்றி பேசுகிறேன்

   Delete
 4. eppo potti thervu
  already announced?

  ReplyDelete
 5. avanungala mudhalla arivikka vidunga da...
  oppaari vaikadhinga da...

  ReplyDelete
 6. Hai friends this is Saravanan Don't believe only tet ,give more importance to tnpsc exams

  ReplyDelete
 7. Weightage முறை இருந்தால் சிலர் அதை எதிர்ப்பது உண்டு.. weightage இல்லாமல் தேர்வு வைத்தால் அதை எதிர்க்க சிலர் உண்டு.. இருவரின் கருத்துமே ஏற்றுக்கொள்கிற அளவில் இருக்கும் போது... இதை எதிர்த்து அதையும், அதை எதிர்த்து இதையும் என அரசு முடிவு எடுத்தால் இதற்கு நிரந்தர தீர்வு இல்லை

  முன்பெல்லாம் +2 improvement exam என்று ஒன்று உண்டு.. அதைப்போல weightage improvement exam என்று ஒரு எழுத்து தேர்வு (written exam) வைத்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்குமா? என்கிற ரீதியில் கூட பலர் அலோசனை வழங்குகிறார்கள்... (இது சிறந்த வழியா?? தெரியாது..)

  இதைப்போல இரு சாராரும் பாதிக்கா வண்ணம் அரசின் முடிவு இருந்தால் நன்று

  ReplyDelete
 8. Saattaiyadi .. writing.. thanks sir/mam

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. .... பய செங்கொட்டை

  ReplyDelete
 11. முடங்கியதா?
  முறைகேடால் முடங்கிய டி.ஆர்.பி., தேர்வுகள்
  டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க கோரிக்கை
  ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த தேர்வுகள், உரிய தேதியில் நடத்தப்படாமல், பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், தேர்வு பணிகளை, டி.என்.பி.எஸ்.சி., யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
  அரசு பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்களில், ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை நியமிக்க, டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரியமானது, தேர்வு பணிகளை மேற்கொள்கிறது.பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், டி.ஆர்.பி., நடத்திய, பல தேர்வுகளில் பிரச்னைகள் ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ளன.
  அத்துடன், தேர்வுகளில் முறைகேடு
  நடந்ததாகவும், புகார்கள் எழுந்துள்ளன. அதற்கேற்ற வகையில், அரசு கல்லுாரி விரிவுரையாளர் பணிக் கான தேர்வில், 200க்கும் மேற்பட்ட தேர்வர்களின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு, தரவரிசையில் அவர்கள் முன்னிலை பெற்றனர். இதை, மற்ற தேர்வர்களே கண்டுபிடித்து, டி.ஆர்.பி.,க்கு புகார் எழுதியதால், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
  அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்விலும், 200 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதில் விசாரணை நடந்தபின், எட்டு பேரின் விடை தாள்களில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு உள்ளது.இந்தப் பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யின் ஆண்டறிக்கையில் அறிவிக்கப்பட்ட, அனைத்து தேர்வுகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வேளாண் பயிற்றுனர் பதவிக்கு, 25 காலியிடங் களுக்கு, ஜூலை, 14ல் தேர்வு அறிவிக்கப்பட்டும் நடக்கவில்லை.
  அரசு பாலிடெக்னிக்விரிவுரையாளர் பணிக்கு, ஆக., 4ல் அறிவிக்கப்பட்ட தேர்வும் நடைபெறவில்லை. அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு, 1,883 காலியிடங்களுக்கு, ஜூனில் நடத்த வேண்டிய தேர்வு; உதவி தொடக்க கல்வி அதிகாரி பணிக்கு, 57 இடங்களுக்கு, செப்., 15ல் நடத்தப்பட வேண்டிய தேர்வும் நடத்தப்படவில்லை. அதேபோல, ஆசிரியர்
  தகுதி தேர்வு, அக்., 6ல் நடத்தப்படும் என்றும், இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த அறிவிக்கையும் வெளியாக வில்லை.
  இப்படி எல்லா தேர்வுகளும் நடத்தப்படாமல் முடங்கி கிடப்பதால், கல்வி துறையில் காலியிடங்கள் அதிகரித்து, பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே, முறைகேடு பிரச்னைகளை களையும் வரை, டி.ஆர்.பி.,யின் தேர்வு பணிகள் அனைத்தையும், டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என, கல்வியாளர்களும், பட்டதாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி