13.11.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! (இந்த உள்ளூர் விடுமுறையானது அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் அங்கு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் பொருந்தாது ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2018

13.11.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! (இந்த உள்ளூர் விடுமுறையானது அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் அங்கு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் பொருந்தாது )


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருடாவருடம் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து மாவட்ட மக்களும்., தமிழ்க்கடவுள் முருகனின் பக்தர்களும் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.மேலும் சூரசம்ஹாரத்தினைக்கான மாவட்ட மக்கள் அனைவரும் நவம்பர் 13 ம் தேதியன்று வருகை தந்த வண்ணம் இருப்பார்கள்.

இதன் காரணமாக தூத்துக்குடிமாவட்டத்திற்கு வரும் நவம்பர் 13 ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப்தந்தூரி அவர்கள் உத்தரவிட்டார்.இந்த உள்ளூர் விடுமுறையானது அரசு தேர்வு எழுதும்மாணவர்களுக்கும்., அங்கு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் பொருந்தாது என்று அறிவித்துள்ளார். மேலும் அவசர தேவைகளுக்கான பொதுஅலுவலகங்கள் குறைந்த பணியாளர்கள் மட்டும் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தார்.மேலும் இந்த விடுமுறை தினமானது அரசாங்கத்தின் பொது விடுமுறை இல்லை என்பதால்., இதற்க்காக டிசம்பர் 8 ம் தேதியான இரண்டாம் சனிக்கிழமையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி