விரைவில் 2,250 ஊழியர்கள் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2018

விரைவில் 2,250 ஊழியர்கள் நியமனம்


இளநிலை உதவியாளர், கள உதவியாளர் ஆகிய பதவிகளில், 2,250 பேரை நியமனம் செய்வதற்கான, தேர்வு குறித்த அறிவிப்பை, மின் வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.

மின் வாரியத்தின் முக்கிய பணிகளுக்கு ஒப்புதல் வழங்கும், அதன் இயக்குனர்கள் குழு கூட்டம், வெள்ளிக்கிழமை நடந்தது. அதில், எழுத்து தேர்வு வாயிலாக, 2,000 கள உதவியாளர்கள்; 250 இளநிலை உதவியாளர் கணக்கு பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்ய, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வு குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தேர்வு எப்போது?

மின் வாரியம், 325 உதவி பொறியாளர்களை நியமிக்க, மார்ச்சில் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்விண்ணப்பித்தனர்.இதுவரை, எழுத்து தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகாததால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி