பொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2018

பொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு


பத்தாம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரையிலான, பொது தேர்வு வினாத்தாள் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.

வரும், 2019 மார்ச்சில், பள்ளி பொது தேர்வுகள் நடக்கின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பல்வேறு பாடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள்,வினாத்தாள் தயாரிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முறை, பாடத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, உள்பக்க கேள்விகள், உதாரண கேள்விகள் என, அனைத்தும் சம அளவில் இடம் பெறும் வகையில், வினாத்தாள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்'முறை ஒழிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாடத்தின் உள்பக்கத்தில் இருந்து, எந்த கேள்வியும் இடம் பெறலாம். ஒவ்வொரு பாடத்துக்கும், 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உதவியுடன், வினாக்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றில் முக்கிய கேள்விகளை தேர்வு செய்து, வினாத்தாள் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக, பள்ளி கல்வி மற்றும் தேர்வு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி