ஜாக்டோ ஜியோ - கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.27-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் - ஆயத்த மாநாட்டில் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2018

ஜாக்டோ ஜியோ - கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.27-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் - ஆயத்த மாநாட்டில் அறிவிப்பு!


சேலம் ஜவகர்மில் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் இன்று பிற்பகல் ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

1-3-2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு கால முறை தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்துவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத கால ஊதிய குழுவில் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், 5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடுவதை முழுமையாக கைவிட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் இன்று மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதில் இருந்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் அரசு பணிகள் பாதிக்கும். அரசு பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும்.

இதுவரை இருந்த எல்லா முதல்-அமைச்சர்களும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அழைத்து பேசுவார்கள். ஆனால் தற்போதுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எங்களை அழைத்து பேசவில்லை.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி 5-ம் வகுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு 82 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக கூறி வருகிறார்கள். குடிகாரர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதாக அநாகரீகமாக பேசி வருகிறார்.

இதனால் இதை கண்டிக்கும் வகையில் சேலத்தில் அவரது வீட்டின் அருகே இந்த மாநாடு நடைபெறுகிறது.

7 comments:

  1. GPF கொடுக்கும் வரை விடாமல் போராட்டம் தொடர வேண்டும்.பழைய ஓய்வூதியம்ப பெறும் வரை போராடுவோம்.

    ReplyDelete
  2. வங்கி ஊழியர்கள் போன்று துணிச்சலாக வங்கியைப் பூட்டிவிட்டு போராடுவது போல். ....
    தமிழக அரசு ஊழியர்களும் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கும் இணைந்து ஒன்றுபட்டு ஒற்றுமையாக அரசு அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடத்தை பூட்டிவிட்டு போராட்டம் நடந்த துணிச்சல் உண்டா. ...
    போராட்டத்தை கட்டுப்படுத்த அல்லது நம்மை ஒழித்துக்கட்ட யாருக்காக நாம் போராடுகிறமோ அதே அரசு உயர் அதிகாரிகளை வைத்து தான் அரசாங்கம் நம்மை ஒடுக்குகிறது....
    எப்பொழுது நாம் அரசு அலுவலகம் மற்றும் ஒட்டு மொத்த பள்ளிகளையும் இழுத்து பூட்டி போராடச் செல்கிறமோ அப்போது தான் அரசாங்கம் நம் மீது கவனம் செலுத்தும்...
    கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்...
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று போதனை செய்யும் நாம் ஒற்றுமையாக போராட்டம் செய்ய முயற்சி செய்வோமா..

    ReplyDelete
  3. அப்படியே கொஞ்சம் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தையும் நிரப்ப சொல்லி கோரிக்கை வையுங்கள் தோழர்களே....

    ReplyDelete
  4. அப்படியே கொஞ்சம் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தையும் நிரப்ப சொல்லி கோரிக்கை வையுங்கள் தோழர்களே....

    ReplyDelete
    Replies
    1. Anaithu govt dept vacant fill pannuvathu mukkiya korrikkaiyaga valiyurtha padukirathu

      Delete
  5. Secondary teachers salary Prachana theeranum sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி