மாணவர்கள் பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதை தடுக்க மிக சூப்பர் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை புது திட்டம் - kalviseithi

Oct 13, 2018

மாணவர்கள் பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதை தடுக்க மிக சூப்பர் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை புது திட்டம்


தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா..?

மீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களா என்றஎண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில்தற்போது இந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் தீர்வு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா..? மீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களா என்றஎண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில்தற்போது இந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் = தீர்வுகண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு இன்று கேள்வி குறியாகி உள்ளது. பெற்றோர்கள் மிகவும் வேதனை கொள்ளும் விஷயம் தம் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்கிறார்களா என்பதே....பள்ளிகல்விதுறையில் எடுத்த நடவடிக்கையில் தானியங்கி வருகை பதிவு வசதி கொண்டுவர அடையாள அட்டையில் சிப் பொருத்தப்பட்டு, பெற்றோர்களின் மொபைல் எண்ணையும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.இந்த முறையை சென்னை போரூரில் உள்ள மகளிர் மேனிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பள்ளி நுழைவு வாயிலில் ரேடியோ அலைகள் பாய்ந்துக்கொண்டிருக்கும் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாக அடையாள அட்டைஅணிந்து செல்லும் மாணவர்களின் வருகை உடனடியாக பதிவு ஆகி விடும்.

குறுஞ்செய்திஇதே போன்று மாணவர்களின் வருகையை தெரிந்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அடையாள அட்டையுடன் சிப் பொருத்தபபடு மொபைல் எண்ணையும் இணைக்கப்பட்டு உள்ளதால், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குள் நுழையும் போது உடனடியாக மெசேஜ் சென்று விடும். அதே போன்று பள்ளி விட்டவுடன் மாணவர்கள் வெளியில் வரும் போதும் உடனடியாக தானாகவே ஒரு மெசேஜ்   பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு சென்று விடும்.இதன் மூலம் மாணவர்கள் நேரம் தாழ்த்தி செல்வதும், பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தடுக்கப்படும். இதை விட மேலானது, பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்துகிறது.இதன் மூலம் மாணவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...என்ற நிலை உருவாகி உள்ளது.

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு மாற்றத்தை கொண்டு வருகிறார். அவர் கொண்டு வரும் அனைத்து திட்டமும் கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்து உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தற்போது செங்கோட்டையன் கொண்டு வந்துள்ள இந்த சிறப்பு திட்டம் மூலம் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் பெருமூச்சு விடுகின்றனர்.

17 comments:

 1. Intha duabakur minister idea VA ?

  ReplyDelete
 2. Intha velaiya part time computer teachers 2 hours than work panni seiyuromma?? Ella school illum kettu parunga appa than nanga day and night website illa porraduvathu puriyum. 7 yrs aa did this work. Full stop yaa sekkiram vainga. Idukku pinnal avolo cs trs ooda work irrukku. Idellam edn Minister kku theriyathu.

  ReplyDelete
 3. Id chip remove panni schoola irukura friend kita kodutha APPA yenna seiveenga

  ReplyDelete
  Replies
  1. மிக பெரிய அறிவாளி நம்ம மங்குனி அமைச்சர்

   Delete
 4. கழட்டி வச்சிட்டா

  ReplyDelete
 5. இன்றைக்கு ஏதும் இல்லைனு நினைத்தேன்

  ReplyDelete
 6. ஐயா தெய்வமே...RFID எல்லாம் இருக்கட்டும்... இன்னும் பல பள்ளிகளில் ஓடு போட்ட கட்டிடம் தான் உள்ளது... தரையில் உட்கார்நதுள்ளனர்... குடிநீர்.. கழிவறை வசதி பின் தங்கிய நிலை... கிழிந்த சீருடை... போதுமான போக்குவரத்து வசதியின்மை... ஆசிரியர் பற்றாக்குறை

  இதெல்லாம் சரி செய்யுங்கள்...

  மாணவன் ஓடாம.. ஆசிரியர்கள் பார்த்துக்கொள்வார்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மையான வார்த்தைகள்...

   Delete
 7. ஐ டி கார்ட வெச்சு ஏமாத்துறது பெரிய வேலை இல்ல, நண்பர் சொன்ன மாதிரி கட்டிடங்கள ஒழுங்கா கட்டி வாத்தியார நியமிச்சா போதும், பசங்க தன்னால வருவாங்க,

  ReplyDelete
 8. எத்தனையே பள்ளிகளில் சுற்றுசுவர்களே இல்லை அதை முதலில் சரி செய்யுங்கள் ஆசிரியர் பற்றாகுறையை போக்குங்கள் அவர்கள் பார்த்துகொள்வார்கள் மாணவர்களை

  ReplyDelete
 9. எத்தனையே பள்ளிகளில் சுற்றுசுவர்களே இல்லை அதை முதலில் சரி செய்யுங்கள் ஆசிரியர் பற்றாகுறையை போக்குங்கள் அவர்கள் பார்த்துகொள்வார்கள் மாணவர்களை

  ReplyDelete
 10. Id card ஐ தொலைத்துவிட்டு வரும் மாணவர்களை உங்களால் தண்டிக்க முடியுமா அமைச்சரே...சட்ட ஒழுங்கை முதலில் சரி செய்ய ஆசிரியர்களுக்கு அதிகாரம் கூடங்கள் போதும்.

  ReplyDelete
 11. Id card ஐ தொலைத்துவிட்டு வரும் மாணவர்களை உங்களால் தண்டிக்க முடியுமா அமைச்சரே...சட்ட ஒழுங்கை முதலில் சரி செய்ய ஆசிரியர்களுக்கு அதிகாரம் கூடங்கள் போதும்.

  ReplyDelete
 12. Anaithu palliyil teacher appointment pannala students control la vanthuviduvan transfer nermaiyaga nadathi vacancy display pannala average kku kuraivaga Ulla school vacancy display pannala 16 District TRS vacancy display full katti teacher appointment pannapothum ful oru tr velaiseiyatum

  ReplyDelete
 13. Athula ellam kollai adikka mudiyuthu... Athanala digital system ku mathren nu solli kollai adikiranga.....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி