பிளஸ் 2, பத்தாம் வகுப்பு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ் - kalviseithi

Oct 2, 2018

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு புதன்கிழமை முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு கடந்த ஜூலை 27-ஆம் தேதி முதலும், பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு கடந்த ஆக.1-ஆம் தேதி முதலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்களே ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய (மறுகூட்டல், மறுமதிப்பீடு உள்பட) தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழை புதன்கிழமை முதல் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

இதில் நிரந்தர பதிவெண் கொண்ட தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை கடந்த ஜூன், ஜூலையில் சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின் அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும் என அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி