கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் - பள்ளி கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2018

கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் - பள்ளி கல்வித்துறை


'அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியில் சேர, இனி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதற்கு, ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அரசு பள்ளிகளில், 1994ல், கணினி அறிவியல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில், கணினி அறிவியல் சார்ந்த, 'டிப்ளமா' படித்தவர்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின், பி.எஸ்.சி., கணினி அறிவியல் பாடம் அறிமுகமானதால், பி.எஸ்.சி., - பி.எட்., முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப் பட்டனர்.இந்த அடிப்படையில், 765 ஆசிரியர்கள், தற்போது பணியாற்றுகின்றனர்.

ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்த, முதுநிலை ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், கணினி ஆசிரியர் நியமனத்தில், தமிழக அரசு, புதிய முடிவு எடுத்துள்ளது.அதன்படி, தற்போது, 809 காலியிடங்களை நிரப்ப, முதுநிலை படித்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என, பள்ளி கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு, ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். அவர்கள், மேல்நிலை பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர்பரசுராமன் தலைமையில், நேற்று பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

ஆனால், அதிகாரிகள் கூறியதாவது:பட்டப்படிப்பு முடிக்காதவர்கள், பல ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்களாக பணியாற்றினர். பட்டப்படிப்பு அறிமுகமானதும், புதிதாக பட்டப்படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல, தற்போது, முதுநிலை படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே பட்டப்படிப்பு கல்வி தகுதி யுடன் பணி பெற்றவர்களுக்கு, முதுநிலை அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

13 comments:

  1. முதுநிலை படிப்பு கட்டாயம் ok, next plam என்ன பன்ன போறீங்க, எப்ப பன்ன போறீங்க, சும்மா இருக்கவங்கள உசிப்பிவிடுவதே உங்கள் இலட்சியம். சொல்லாமல் செயலில் காட்டுங்கள் அப்போது உங்கள தலைவணங்கிறோம்.

    ReplyDelete
  2. hi..lkg,ukg class ku teacher paper 1 la pass panavangala poduvangala..

    ReplyDelete
  3. அப்போ BSc B.Ed,முடிச்சவங்க எல்லாம் என்ன பண்றத்து. எங்களுக்கு ஒரு வழிய சொல்லிட்டு நீக்க appointment Msc முடிச்சவங்களுக்கு கொடுங்க. இல்லையா 8th வரைக்கும் கணினி பாடம் நடத்த வழி செஞ்சி கொடுங்க .. எங்களை கஷ்டப்படுத்தாதீங்க sir , .

    ReplyDelete
    Replies
    1. முதுகலை படிப்பு படிக்கவும், ஏற்கனவே படிச்சவனுக்கு வேலை இல்ல, 11 12க்கு பாடம் நடத்த PG வேணுன்னு தெரியாதா?

      Delete
  4. Replies
    1. Not only Trb annual planner but also Trb is dead

      Delete
  5. I'm Bsc physics B.Ed.,MCA.im eligible for PG computer teacher.

    ReplyDelete
  6. UG and PG are same Mager
    only cross Mager not eligible

    ReplyDelete
  7. Bsc cs mca bed eligible for pg computer science e

    ReplyDelete
  8. Don't delay,anounce the examination date as soon as possible.we are egarly waiting.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி