பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2018

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன்


''பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபியில், நேற்று அவர் கூறியதாவது:நவ.,15ல் ஆசிரியர்களுக்கு, பட்டயக்கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, ஒரு மாவட்டத்துக்கு, ௧௦ ஆசிரியர்கள் தேர்வு செய்ய உள்ளோம்.நவீன உலகத்துக்கு தகுந்தாற்போல், பாடத்திட்டத்தை மாற்றினால் தான், கல்வியில் பிற மாநிலங்களுடன் போட்டி போட முடியும். மத்திய அரசு கொண்டு வரும், பல்வேறு பொதுத்தேர்வுகளை சந்திக்கும் வகையில், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

 'நீட்' தேர்வுக்கு முழு விலக்களிக்க, வேண்டுகோள் விடுத்தாலும், தவிர்க்க முடியாமல் பயிற்சி அளிக்க வேண்டிய சூழல் இருக்கிறது.பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும், ஆசிரியர்கள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதன்மை செயலர், மாவட்ட கலெக்டர் கண்காணிக்கின்றனர். இதுபோன்ற தவறுகள், இனி எங்கு நடந்தாலும், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. பாலியல் குற்றசாட்டில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டாலும் வரவேற்க்கதக்கது.ஆனால் கல்வி அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து மெல்ல கற்கும் மாணவர்களை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது பொய்குற்றசாட்டை சுமத்தி, ஆசிரியர்களை காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்துபவர்கள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கபடுகிறது. அதை உடனுக்குடன் ஊடகங்களில் வெளியிடுமா? ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்படுமா?

    ReplyDelete
  2. Sariyana kealvi keattinga sir. Naakka pidongra maathiri

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி