மூன்றாம் பருவ புத்தகம் அச்சடிப்பு துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2018

மூன்றாம் பருவ புத்தகம் அச்சடிப்பு துவக்கம்


தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடும் பணி துவங்கியுள்ளது.தமிழக பள்ளி கல்வியின் சமச்சீர் பாட திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ தேர்வு முறை அமலில் உள்ளது.

ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம் வசூலித்து புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.நடப்பு கல்வி ஆண்டில், அக்., 3 முதல், இரண்டாம் பருவம் துவங்கியுள்ளது. டிச., 24ல், இரண்டாம் பருவ பாடங்கள் முடிய உள்ளன. ஜன., 2 முதல், மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்படும். இதற்காக, டிசம்பரிலேயே, மூன்றாம் பருவ புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்ப, தமிழ்நாடு பாடநுால் கழகம் முடிவு செய்துள்ளது.

இதையொட்டி, பழைய மற்றும் புதிய பாடத்திட்ட வகுப்புகளுக்கு, புத்தகங்களை அச்சிடும் பணிகளும் துவங்கியுள்ளன. அதேபோல, பிளஸ் 1ல், இதுவரை நிலுவையில் இருந்த, சிறுபான்மை மொழி பாடங்களுக்கும், புத்தக அச்சடிப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ள தாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 comment:

  1. innum second term bookneraya schoolla tharala athukkulla third terma?😡

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி