- Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2018


விராலிமலை,அக்.16: அப்துல்கலாம் பிறந்த நாளில்  பி.எஸ்.எல்.வி செற்கைகோள் மாதிரி அமைத்த கவரப்பட்டி அரசுப் பள்ளியை பொதுமக்கள் பாராட்டினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 87 ஆவது பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது..
 
முக்கிய நிகழ்வாக டாக்டர் அப்துல்கலாம் அவர்களால் வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி செயற்கைகோள் மாதிரியானது பள்ளித்தலைமையாசிரியர் முயற்சி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாலும் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு பள்ளிக்கு அர்ப்பணிக்கப்பட்டது..

இது குறித்து பள்ளித்தலைமைஆசிரியர் சிவக்குமார் கூறியதாவது: மாணவர்கள் மத்தியில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையை தூண்டும் நோக்கத்திலும்,சாதாரண நிலையில் இருந்து ஒரு பி.எஸ்.எல்.வி செயற்கைகோளை இயக்கும் நிலைக்கு உயர்ந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உழைப்பு,விடாமுயற்சி,தன்னம்பிக்கை ,நேர்மை ஆகியவற்றை  மாணவர்களின் மனதில் விதைக்கும் கருவியாக பி.எஸ். எல்.வி மாதிரி இப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டது..மேலும் இது அமைக்கப்பட்டதன் நோக்கமே கவரப்பட்டி அரசுப் பள்ளியிலும்  பல அப்துல்கலாம்கள் உருவாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் என்றார்.

விராலிமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஸ்வநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பி.எஸ்.எல்.வி செயற்கைகோள் மாதிரி அமைப்பினை திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் புகைப்படத்திற்கு சிறப்பு விருந்தினர்,பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் ,மாணவ,மாணவியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்..

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஊர்ப்பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பி.எஸ்.எல்.வி செயற்கைகோள் மாதிரி அமைப்பினை ஏற்படுத்திய கவரப்பட்டி தலைமைஆசிரியர்,ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்களை பாராட்டிச் சென்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி