DPI - வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2018

DPI - வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்


சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடிஏற்பட்டுள்ளதாக கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து டிபிஐ வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் மீது வழக்கு நடந்தது.அதனால் தேர்வு முடிவுகள் நிறுத்தி  வைக்கப்பட்டது.

 கடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு  முடிவுகளை வெளியிட்டது. ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி தேர்ச்சி அடைந்திருந்த பலர் தற்போது தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், சிறப்பு ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளின்படி விளையாட்டு ஆசிரியர்கள் தெர்வில் பெரும்பாலும்ஆண்களே தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதனால் பெண் ஆசிரியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த முறை வெளியான தேர்வு முடிவுகளின்படி தேர்ச்சி அடைந்திருந்த பலர் இந்த முறை குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. பலர் தேர்ச்சி அடையவில்லை. மேலும், ஓவியப்பாடத்துக்கான தேர்வில் பலருக்கு தகுதியிழப்பின் காரணமாக பணி நியமனம் பெறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுபோன்ற காரணங்களால் அந்த ஆசிரியர்கள் தேர்வுவாரிய தலைவரை சந்தித்து விளக்கம் கேட்கவேண்டும் என்று தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். ஓவியம் என்ற பாடத்துக்கு தமிழ் வழியில் தேர்வு எழுத தேவையில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அளித்த அறிவிப்பை அதிகாரிகளிடம் காட்டினர்.

அதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஆலோசிப்பதாக தெரிவித்தனர். மேலும் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தவர்களும் விளக்கம் அளித்து பேசியதுடன் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்றும் வாதிட்டனர். அதுகுறித்தும் அதிகாரிகள் ஆலோசிப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று மாலை வரை சிறப்பு ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

24 comments:

  1. I think ivlo nala namala emathi irukirargal intha athigarigal

    ReplyDelete
  2. Re-exam ஒனறுதாஒன் தீர்வு. மற்ற எதுவும் சரிபட்டு வராது. பால்டெக்னிக் தேர்வைபோல திரும்பவும் தேர்வு நடைபெற வேண்டும்.

    ReplyDelete
  3. Re-exam ஒன்றுதான் தீர்வு.

    ReplyDelete
    Replies
    1. சான்றிதழ் சரிபார்ப்பு கும் re exam கும் எனன சம்பந்தம்

      Delete
    2. நாங்க சம்மந்தப் படுத்துவோம்ல. மறுதேர்வு கேட்டு இதுல குளறுபடி பண்ணி கொஞ்சம் விளையாடிப் பாப்போம். நாங்க தேர்வாகி இருந்தா தான அடுத்தவன பத்தி கவலைப்பட. ஊருக்குள்ள எங்கள மாதிரி நாலு பேரு இருக்கத்தான் செய்வோம். லிஸ்ட்ல எங்க பேரு வரலனா உடனே எல்லா கோட்டையும் அழிச்சிட்டு மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிப்போம்

      Delete
  4. சான்றிதழ் சரிபார்பிற்கு அழைக்கப்பட்ட அனைவருக்கும் வேலை தாருங்கள்.இலவச டேப் ஒன்றும் வேண்டாம்.வேலை தந்தாலே போதும்.

    ReplyDelete
  5. இலவச tab உங்களுக்கு தரவே பள்ளி மாணவ மாணவிகளுக்கு தான்

    ReplyDelete
  6. Exam le than athunai pirachanaiyum. Re-exam வச்சாதான் அத்துனை பிரச்சனையும் solve ஆகும்.

    ReplyDelete
  7. இப்போது வேலை போட்டாலே ஐந்து ஆறு பேர் ஓய்வு பெற்று விட்டார்கள் அதாவது பிறந்த வருடம் 1960 உள்ளவர்கள் பணி ஓய்வு பெற்று விட்டார்கள் இன்னும் பணி ஆணை வழங்குவதற்குள் 1962 உம் முடிந்து விடும் மறு தேர்வு என்றால் இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பவர்களுக்குத் தான் படித்து TTCமுடித்து வேலை கிடைக்கும் தேர்வாகியிருப்பவர்கள் வயதைப் பாருங்கள் 80 சதவீதம் பேர் 45 வயதைக்கடந்தவர்கள் அவர்கள் பாவம் உங்களை சும்மா விடாது நீங்கள் தேறும் வரை தேர்வு நடத்திக்கொண்டே இருக்கவேண்டியது தான் முறைகேடு என்றால் என்ன என்பதை சொல்லுங்கள் அதை விடுத்து மறுதேர்வு என்பது சுயநலத்தின் வெளிப்பாடு இப்படிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்

    ReplyDelete
  8. Special teachers second list current vacant fill panunga minister sir aged people valluvam karunai kattunga konjam posting increase pannunga group four increse pannuranga nanka ketta illenu sollrenga why sir

    ReplyDelete
  9. ஐயா age+parttime teachers experience+cv list ஐயும் consider பண்ணுங்க.நாங்கள் ரொம்ப பாவம் sir

    ReplyDelete
  10. extra post create பண்ணுங்கள்.நீங்கள் நல்லா இருக்கணும்,வாழையடி வாழையா வாழனும்

    ReplyDelete
  11. I'm 47yrs old sugar patient,my name is in cv list.please create extra posting sir

    ReplyDelete
  12. Pollampurathu waste namma Sharba sangam thalyvar pasanum minister mudivedukanum nilmai Anna yaravathu reply

    ReplyDelete
  13. ஆசிரியர் தேர்வு வாரியமா .இல்லை பணம் பெறும் வாரியமா ? தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு தன்னை ஒரு பரபரப்பாகவே காட்டிக்கொள்வதில் கை தேர்ந்த மனிதர் செங்கோட்டையர்.பதிவு மூப்பின் முறையை தகர்த்தியதே தேர்வு மட்டும் வைத்து பணம் சம்பாதிக்க நன்பர்களே.தளர்ந்து விடாதீர்கள்.நல்லது விரைவில் நடக்கும்.அவர்களுக்கு தெரிந்த சில நபர்களை தகுதியானவர்களாக்க இப்படியான பிரச்சினைகள் உருவாகுகிறது.வேலையே கிடைக்காதவனுக்கு வேலை தேவை.பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை தேவை.நிரந்தர வேலை செய்பவர்களுக்கு அதிக சம்பளம் தேவை. இவர்களில் யார் பாவம் ? அனைவரும் இந்த உலகில் வாழவேண்டும்.

    ReplyDelete
  14. Today special teachers nilmai trb la Manuva vangi vachutu anupitangal

    ReplyDelete
  15. Trb Enna soluthu pathil yaravathu sollunga please

    ReplyDelete
  16. தேர்வு வாரியம் முறையாக செயல் பட வில்லை ஓவியம் என்பது வரைந்து காட்டுவது அதற்கு போய் தமிழ் மீடியம் சான்றிதழ் வேண்டும் என்பதும் தேர்வு எழுத விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே தமிழ் மீடியம் சான்றிதழ் வாங்க வேண்டும் என்பதும் தேர்வு எழுதி செலக்ட் ஆவதற்கு முன்பே எப்படி தெரியும்.சான்றிதழ் சரிபார்ப்பு க்கு அழைப்பு வந்தபின் தானே வாங்க முடியும் எல்லோரும் அதைதானே செய்துள்ளார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு நடத்திய அதிகாரிகள் இதனை ஒருவர் கூட higher greade drawing தமிழ் மீடியம் வேண்டும் என்று கேட்கவே இல்லை இப்போது இதை ஒரு காரணம் காட்டி வாழ்க்கையில் மிகவும் போராடி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த வேர்களின் நிலையை கருத்தில் கொண்டு அந்தந்த பிரிவுகளில் அவரவருக்கு ஒதுக்கீடுகள் செய்ய ப்பட வேண்டிய பணி இடத்திற்கே தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று உள்ள நிலையில் கூட அந்த இடத்தில் risarved என்று கூறி நிரப்பப்படாமல் இருப்பது மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் உள்ளவர் களை தற்கொலை செய்து கௌள்ளும் அளவுக்கு மன வேதனை க்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தள்ளியுள்ளது.ஆகவே கண்டிப்பாக மறு பரிசீலனை செய்து தேர்வு பட்டியல் வெளியீடு செய்ய மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் நடவடிக்கை எடுத்து தேர்வு எழுதி ஓராண்டு காலம் கடத்தி எந்த வகையிலும் தகுதி வாய்ந்த யாரும் பாதிக்காதவாறு தேர்வு கருதி பட்டியல் வெளியீடு செய்து பின்னர் தான் பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.இன்னும் எத்தனை மாதங்கள் தாமதமானாலும் தகுதிவாய்ந்த ஒரு நபர் கூட பாதிக்கப்படக் கூடாது என்பதே தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.

    ReplyDelete
  17. குறைகள் இருந்தால் சுட்டி காட்டினால் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யது நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. stayவாங்க வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி