கல்வித்துறை நிர்வாக சீர்திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடியால், மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையில் மே மாதம் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்பட்டன.
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் எனஅனைத்தையும் கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக 120 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.அவை 37,112 அரசு பள்ளிகள், 8,403 உதவிபெறும் பள்ளிகள், 12,419 தனியார் பள்ளிகளை கண்காணிக்கின்றனர். நுாறுக்கும் குறைவான பள்ளிகளை கண்காணித்த மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு, கூடுதலாக 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒதுக்கப்பட்டன.
அதற்கேற்ப ஊழியர்களை அதிகரிக்கவில்லை. இதுவரை தேர்வுப்பிரிவும் தனியாக பிரிக்கவில்லை.இதனால் மாவட்டக் கல்வி அலுவலக ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.கல்வித்துறை நிர்வாக ஊழியர்கள் கூறியதாவது: பள்ளிகள் ஆய்வு, ஆசிரியர் ஊதியம், பணப்பலன், 14 வகையான நலத்திட்டம், தேர்வு போன்ற பணிகளை கவனிக்கிறோம்.
கூடுதல் பள்ளிகளை ஒதுக்கியபோதிலும், ஊழியர்களை அதிகரிக்கவில்லை. மாவட்டக் கல்வி அலுவலக ஊழியர்களுக்கு மனஉளைச்சலை தருகின்றனர். பலர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர், என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி